பொது செய்தி

இந்தியா

தேர்தலை ஒத்திவைக்க குவியும் கோரிக்கைகள்

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி :தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா, ரம்ஜான் நோன்பு போன்ற காரணங்களைக் காட்டி லோக்சபா தேர்தல் தேதிகளை ஒத்திவைக்கும்படி நாடு முழுவதும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை நடைபெறுவதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு

புதுடில்லி :தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா, ரம்ஜான் நோன்பு போன்ற காரணங்களைக் காட்டி லோக்சபா தேர்தல் தேதிகளை ஒத்திவைக்கும்படி நாடு முழுவதும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.



latest tamil news


லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரை நடைபெறுவதாக இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் தேதியை ஒத்திவைக்கும்படி நாடு முழுவதும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


ரம்ஜான்:

மே 5ம் தேதி துவங்கி ஜூன் 4 வரை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவங்குவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்கும்படி மேற்குவங்கத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்துள்ளன. ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடத்தினால் அது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என சுமார் 31 சதவீத இஸ்லாமியர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
மேற்குவங்கம், பீகார், உ.பி.,யில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


latest tamil news


நோன்பின்போது ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என மேற்குவங்க திரிணாமுல் காங்., தலைவரும், கோல்கட்டா மேயருமான பிகாத் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதே போன்று தமிழகத்தில் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 18 அன்று மதுரையில் சித்திரை திருவிழா நடப்பதால், மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில் தேர்தலை ஒத்தி வைக்குமாறு மதுரையின் அனைத்து கட்சியினர், மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
12-மார்-201904:12:48 IST Report Abuse
blocked user மதச்சார்பற்ற நாட்டில் மதத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் - தேர்தல் கமிஷன்...
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-மார்-201900:06:00 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\\\மே 5ம் தேதி துவங்கி ஜூன் 4 வரை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் துவங்குவதால் தேர்தல் தேதியை தள்ளி வைக்கும்படி மேற்குவங்கத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை வைத்துள்ளன......... \\ ....... ரம்ஜான் மாதத்தில், கம்பெனிகளில் வேலை செய்யும் அனைவரும் மாதம் பூராக விடுமுறை எடுப்பதில்லை ............. அவரவர் வேலைகளை செய்துகொண்டு, நோன்பையும் கடைப்பிடிக்கிறார்கள் ........... தனியாக பிரேயருக்கு கூட தனி நேரம் கேட்பதில்லை ............ எனது நண்பர்கள் நிறையபேர் காலை அலுவலகம் வந்தது முதல் திரும்ப வீடு செல்லும் வரை பச்சை தண்ணீர் கூட அருந்தி நான் கண்டதில்லை ............. ஆனால், வேலையை செய்வார்கள் ..... அது போல, தேர்தல் என்பதும் ஒரு வேலைதானே .......... அதற்கு ஏன் அவர்கள் மறுப்பு தெரிவிக்க போகிறார்கள்? .......... எனக்கென்னவோ, இது மமதா தீதி, உதிரி கட்சி மற்றும் குழுக்களை தூண்டிவிட்டு செய்யும் நாடகம் போலத்தான் தெரிகிறது ........
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-மார்-201922:52:18 IST Report Abuse
Pugazh V திமுக காரன் எவனும் சித்திரை திருவிழாவுக்கு வரமாட்டன்- அப்படின்னு நீங்களே நெனச்சு ண்டா அது சரியாயிடுமா? உங்களுடையது தவறான எண்ணம்.
Rate this:
blocked user - blocked,மயோட்
12-மார்-201904:14:16 IST Report Abuse
blocked userஎன்ன இது... தை ஒன்றுதானே புத்தாண்டு... மூளை பிசகி விட்டதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X