ஆட்சியில் மோடி; பா.ஜ., புது திட்டம்

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (38)
Advertisement
BJP, BharatiyaJanataParty, PMModi, Modi, பாஜ, மோடி,

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரித்து, மோடியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.ஸூம் திட்டம் தீட்டி வருகின்றன.


100 சதவீத ஓட்டுப்பதிவு


543 தொகுதிகளிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவை நிறைவேற்றிக் காண்பிக்க பா.ஜ., விரும்புகிறது. வெற்றி பெறும் பா.ஜ., வேட்பாளர்களுக்கும் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அதிகரிக்க அக்கட்சி நினைக்கிறது. இதற்காக பூத் அளவில் உள்ள பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி, மோடிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்.,ஸிடம் பேசிய அமித்ஷா, 2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தையும், இதை 50 சதவீதமாக்க வேண்டும் என்றும் கேண்டுகொண்டுள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

2014 தேர்தலில் 31 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றாலும் 282 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ., இம்முறை நோட்டாவால், ஓட்டுகள் வீணாகி விடக் கூடாதே என்ற கவலையும் பா.ஜ.,வை ஆட்டிப் படைக்கிறது.






250 இடங்கள்?


வரும் தேர்தலில் பா.ஜ., 250 தொகுதிகள் வரை வெற்றி பெறக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு வேளை நடந்தால் ஆட்சி அமைப்பதில் சிரமம் ஏற்படும்.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சென்ற தேர்தலில் மொத்தம் 355 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை இக்கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்கலாம். அதாவது, சென்ற தேர்தலைவிட 70 இடங்களை இழக்க வேண்டி வரலாம். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்க இது போதும்.

2014 தேர்தலில் 80 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 இடங்களில் ஜெயிக்கலாம். நடப்பு லோக்சபாவில் வெறும் 44 எம்.பி.,க்களை மட்டுமே வைத்திருக்கிறது காங்., இக்கட்சி மட்டும் வரும் தேர்தலில் 82 இடங்களில் வெற்றி பெறலாம் என்கிறார்கள்.






முதல் வாக்காளர்கள்


மோடி ஆட்சிக்கு வருவதும் வராமல் போவதும், வரப்போகும் தேர்தலி்ல் முதல்முறை ஓட்டளிக்கப் போகும் 8.1 கோடி வாக்காளர்களின் கையில் இருக்கிறது என பா.ஜ., நம்புகிறது. 18 முதல் 23 வயதுள்ள இந்த வாக்காளர்கள், 29 மாநிலங்களில் 282 தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்றனர். இதில் 20 தொகுதிகள், தமிழகத்தில் மட்டும் இருக்கின்றன என் தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரம் கூறுகிறது.

இவற்றில் 217 தொகுதிகள் 12 பெரிய மாநிலங்களில் அமைந்துள்ளன. அவை, மேற்கு வங்கத்தில் 32, பீகாரில் 29, உ.பி.,யில் 24, கர்நாடகாவில் 20, ராஜஸ்தானில் 17, கேரளாவில் 17, ஜார்க்கண்டில் 13, ஆந்திராவில் 12, மகாராஷ்டிராவில் 12, ம.பி.,யில் 11, அசாமில் 10.

வரும் தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால், சென்ற தேர்தலில் வெற்றி வித்தியாசத்தை விட, இவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201919:50:29 IST Report Abuse
Chinnappa Pothiraj சிலபேருக்கு பிற நாட்டினரின் அடிமைகளாக வாழ்ந்து பழக்கப் பட்டு போய்விட்டது ஏனென்றால் உழைப்பில்லாமல் பணமும் பிற சலுகைகளும் கிடைக்கிறது ஆனால் அவர்களுக்கு தெரியும் நாட்டின் பாதுகாப்புக்கும் தன்மானத்திற்கும் ஏற்ற கட்சி பாரதிய ஜனதா என்று அவர்களுக்கு தெரியும் ஏனென்றால் அவர்கள் தன்மானப் பிரச்சினை. அதனால்தான் எதிர்க்கிறார்கள் காலத்தின் கொடுமை என்ன செய்வது.இந்தியராகிய நாம் திரு நரேந்திர மோடி அவர்களே மீண்டும் பிரதமராக்குவோம் நாட்டை வளப்படுத்தும் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
16-மார்-201909:33:47 IST Report Abuse
PANDA PANDI . பிஇ கேர் புல்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-மார்-201908:38:06 IST Report Abuse
Natarajan Ramanathan ஒவ்வொரு மாதம் இரண்டாவது சனிக்கிழமை தி நகரில் ஹிந்திபிரசாரசபா எதிர் தெருவில் மாலை ஐந்து மணிக்கு RSS தொண்டர்கள் கூட்டம், ஒரு டீ கூட வழங்காவிட்டாலும் எவ்வளவு டிஸிப்பிளினாக நடக்கிறது என்று பாருங்கள். RSS தொண்டர்களை பற்றி திருமாவளவன் பேசியதை YOUTUBEல் கேளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X