ஆட்சி அமைக்க போவது யார்?: ஓர் அலசல்

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (72)
Share
Advertisement
புதுடில்லி : நாடு முழுவதும் ஏப்.,11 துவங்கி மே 19 வரை லோக்சபா தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 வெளியிடப்படும் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இதனையடுத்து அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தாண்டி 2வது முறையாக மோடி பிரதமர் ஆவாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள்

புதுடில்லி : நாடு முழுவதும் ஏப்.,11 துவங்கி மே 19 வரை லோக்சபா தேர்தல் நடக்கும். தேர்தல் முடிவுகள் மே 23 வெளியிடப்படும் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.

இதனையடுத்து அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம் மற்றும் எதிர்ப்பை தாண்டி 2வது முறையாக மோடி பிரதமர் ஆவாரா? என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. காங்., தலைவர் ராகுலுக்கும் இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கப் போகிறது.latest tamil news


இந்த தேர்தலில் கட்சிகளின் பலம், பலவீனம், வாய்ப்புக்கள், சவால்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் விபரம்:


தேசிய ஜனநாயக கூட்டணி :


பலம்: பிரதமர் மோடி திடமான தலைவராக விளங்குவது தேஜ., கூட்டணிக்கு பெரும் பலம். சமீபத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாக்.,ல் பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய துணிவான சர்ஜிக்கல் ஸ்டிரைக் மோடியின் தலைமைக்கு கூடுதல் பலம். ஏழைகளுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள், அமித்ஷாவின் வியூகங்களும் பா.ஜ.,வின் பலம்.


latest tamil news


பலவீனம் : உ.பி., மற்றும் கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் மற்றும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிகள் பா.ஜ.,விற்கு சவாலாக இருக்கும். விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, ஜிஎஸ்டி.,யால் ஏற்பட்ட பிரச்னைகள், சிறுபான்மையினர் எதிர்ப்பு உள்ளிட்டவை பலவீனமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது.
வாய்ப்புக்கள் : தேசிய பிரச்னைகளில் பா.ஜ., அரசு கொண்டு வந்த 7 சதவீத வளர்ச்சி, வரி சீர்திருத்தங்கள், நலத்திட்டங்கள், தங்களுக்கு எதிரான மம்தா போன்ற மாநில முதல்வர்கள், ராகுல் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களை கையாளும் முறை, நிலையான ஆட்சியை கொடுத்தது உள்ளிட்டவை பா.ஜ.,விற்கு தங்களின் சாதனைகளாக கூறி ஓட்டு கேட்க வாய்ப்புள்ளது.
சவால்கள்: தேர்தல் பிரசார சவால்களை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொறுப்பும் மோடியின் முன் உள்ளது. 2014 தேர்தலை விட பா.ஜ.,விற்கு இந்த தேர்தல் புதிய களத்தை ஏற்படுத்தி தராது. மாறாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர்., காங், பிஜூ ஜனதா தளம் போன்ற நடுநிலை கட்சிகள் யார் பக்கம் செல்கின்றன என்பதை பொறுத்தே பா.ஜ.,விற்கு எதிரான பட்டியலில் உள்ளவர்கள் யார் என்பது தீர்மானமாகும்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி :


பலம் : பா.ஜ.,வுக்கு எதிராக சமீப காலமாக காங்., முன்னெடுத்த பிரசாரங்கள், ராகுல் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளது ஆகியன காங்.,கின் பலமாக பார்க்கப்படுகிறது. ராகுல் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில் தன்னை இணைத்து கொள்ள முயற்சி எடுப்பதும் மற்றொரு பலம்.


latest tamil newsபலவீனம் : ரபேல், விவசாயிகள் பிரச்னை, சகிப்புத்தன்மையின்மை, வேலை வாய்ப்பு, தற்போது பாக்., மீதான விமானப்படை தாக்குதலை கேள்வி கேட்டு வருவது, பா.ஜ.,வை தொடர்ந்து எதிர்ப்பது என எதிர்மறை பிரசாரத்தை காங்., மேற்கொண்டது அக்கட்சியின் பலவீனம். காங்., ஆட்சியில் நடந்த ஊழல்கள், மோடி மீது 2014 தேர்தலின் போது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறியது காங்.,ன் பெரிய பலவீனம்.
வாய்ப்புக்கள்: மத்திய அரசின் பல நலத்திட்டங்கள் இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளதால் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை அளிக்கலாம். பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரே அக்கட்சிக்கு எதிராக பேசி வருவதும் காங்.,கிற்கு கூடுதலாக பா.ஜ., எதிர்ப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
சவால்கள் : பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக மோடி எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகள் அரசு மீதான செல்வாக்கை அதிகப்படுத்தி உள்ளது. காங்.,கிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு. காங்., பிரியங்காவை முன்னிலைப்படுத்தி செல்வாக்கை உயர்த்த நினைத்தாலும், அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர் மீதான வழக்குகள் சரிவாக அமைகின்றன. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் காங்., சேர்த்துக் கொள்ளப்படாதது பலவீனமாக அமைந்துள்ளது.


மூன்றாவது அணி :


பலம் : திரிணாமுல் காங், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்., ஆகியன தங்களின் மாநிலங்களில் பலமான கட்சிகளாக உள்ளன பல மாநிலங்களில் காங்.,ஐ விட பா.ஜ.,விற்கே சவாலாக அமையும். பெரிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்ற பா.ஜ.,வும் - காங்.,கும் அதிக அளவில் போராட வேண்டி இருக்கும் என்பதால் அது 3வது அணிக்கே சாதகமாக அமையும்.


latest tamil news


பலவீனம் : பலமான தலைவர் யாரும் இல்லாதது ஒட்டுமொத்த 3வது அணிக்கும் மிகப் பெரிய பலவீனம். ஒரே அணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் வேறு வேறு கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். வட கிழக்கு மாநில்ஙகளில் பா.ஜ.,வை பலமான கட்சியாக உருவெடுக்க இடதுசாரிகளும், காங்.,ம் வழிவகுத்து கொடுத்தது பலவீனமாக அமைந்துள்ளது.
வாய்ப்புக்கள் : சமீபத்தில் நடந்து முடிந்த மாநில சட்டசபைகளில் 3 ல் வெற்றி பெற்றது 3வது அணிக்கு வெற்றி வாய்ப்பு தரும் விஷயங்களாக உள்ளன. பல மாநிலங்களில் பா.ஜ., 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதும், பிராந்திய கட்சிகள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாததும் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

சவால்கள் : மாநில கட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால் எந்த மாநிலத்தில் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பம் வாக்காளர்களிடம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரதமரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி பலரிடமும் நம்பிக்கையை பெறவில்லை. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியிலிருந்து காங்., புறக்கணிப்பட்டிருப்பது 3வது அணியின் ஒற்றுமையில் விரிசலாக பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
12-மார்-201916:05:40 IST Report Abuse
arabuthamilan இந்தியாவுக்குள் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும், உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை பல மடங்குtதற்போதைய பிரதமர் உயர்த்தியிருக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
Rate this:
Ganapathy Senthilkumar - Tiruchirappalli,இந்தியா
12-மார்-201920:46:00 IST Report Abuse
Ganapathy Senthilkumarஅப்படியா சொல்லவேயில்லை...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-மார்-201906:02:35 IST Report Abuse
 nicolethomsonஇந்த உண்மையை சொன்னீங்க என்றால் குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் டாஸ்மாக் நாட்டு மாக்களுக்கு கோவம் வரும் , சரியா செண்டு?...
Rate this:
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
12-மார்-201906:37:33 IST Report Abuse
Viswanathan மேதாவி போல் தன்னை நினைத்து மக்களை , ஆதார் அட்டையை தூக்கி அலைய விட்டதால் , தோதாகி போன வாக்கு சீட்டின் மூலம் , தூரத்தில் வைப்பார் காண்போம்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-மார்-201906:03:29 IST Report Abuse
 nicolethomsonகடற்கரையில் ஐர்கூலர் வைத்து எதிர்காற்றை சுவாசிக்கும் அடுத்த தலைவனே வருக...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-மார்-201904:10:48 IST Report Abuse
blocked user 60 ஆண்டு பிரச்சினைக்கு ஐந்தாண்டில் தீர்வு காணவேண்டும்... இல்லை என்றால் மக்கள் 60 ஆண்டுகள் பிரச்சினைக்கு மூல காரணமான காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள்...
Rate this:
Makkalukkaga - India,இந்தியா
12-மார்-201911:33:45 IST Report Abuse
Makkalukkagaநாங்கள் ஐந்து ஆண்டுகளில் தீர்வை விரும்ப வில்லை . தாங்கள் ஐந்து ஆண்டுகளில் எதை சாதிப்போம் என்று சொன்னீர்களே அதை செய்தீர்களா என்று தான் கேள்வி கேட்கிறோம்...
Rate this:
rishi - varanasi,இந்தியா
17-மார்-201913:39:50 IST Report Abuse
rishiஊழல் இல்லாத ஆட்சி இதுவே பெரிய சாதனை ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X