அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., கேட்கும் தொகுதிகள் எவை?

Updated : மார் 11, 2019 | Added : மார் 11, 2019 | கருத்துகள் (28)
Advertisement

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி, திருச்சி அல்லது விருதுநகர் தொகுதி களை, தே.மு.தி.க., கேட்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தே.மு.தி.க., தலைமை தேர்வு செய்துள்ளது.






இதன்படி, கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டியிட உள்ளார். ஆனால், 'தன்னை வேட்பாளராக நிறுத்துங்கள்' என, விழுப்புரம் மாவட்ட செயலர், வெங்கடேசனும் கேட்டு உள்ளார். திருச்சியில், மாநில மாணவரணி செயலர், விஜயகுமாரை களமிறக்க கட்சி தலைமை விரும்புகிறது.

கிருஷ்ணகிரியில், கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், மாவட்டசெயலர் அன்பரசன் ஆகியோரில் ஒருவர், வேட்பாளராக நிறுத்தப்படலாம். விருதுநகரில் மாவட்ட செயலர், செய்யது காஜா ஷெரிப்பை தேர்வு செய்ய, கட்சி தலைமை விரும்புகிறது. வடசென்னையில், மாநில துணை செயலர் பார்த்தசாரதி அல்லது மாவட்டசெயலர் மதிவாணன் நிறுத்தப்படலாம். ஆனால், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், வடசென்னை, திருவள்ளூர் தனி தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., விரும்புகிறது.




தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கான நேர்காணல், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் முன்னிலையில் மார்ச் 13ல் நடக்கிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஒரே நாளில் நேர்காணலை நடத்துகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-மார்-201916:33:33 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாமே வடக்கு தொகுதிகள் தான் தெட்க்கு பகுதியில் ஒன்றை கூட காணோம்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
12-மார்-201912:28:42 IST Report Abuse
karutthu அப்போ திருச்சி தொகுதி ப .குமார்க்கு சீட் இல்லையா ? இந்த இடத்தை பி ஜே பி க்கு கொடுத்து விடலாம் திருமதி லலிதா குமாரமங்கலம் அவர்களை நிற்க வைக்கலாம் சாரூ பாலா தொண்டைமான் தினகரண் கட்சிக்கு போயி விட்டதால் பி ஜே பி க்குஜெயிக்க வாய்ப்பிருக்கு
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
12-மார்-201912:12:53 IST Report Abuse
Indhuindian அந்த அம்மாவூட சொந்தவூரான வேலூர்லயே நிக்கவேண்டியது தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X