பதிவு செய்த நாள் :
ஆட்சியில் மோடி
பா.ஜ., புது திட்டம்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரித்து, மோடியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்க பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., திட்டம் தீட்டி வருகின்றன.

ஆட்சியில்,மோடி,பா.ஜ., புது திட்டம்


100 சதவீத ஓட்டுப்பதிவு:


543 தொகுதிகளிலும் 100 சதவீத ஓட்டுப்பதிவை நிறைவேற்றிக் காண்பிக்க பா.ஜ., விரும்புகிறது. வெற்றி பெறும் பா.ஜ., வேட்பாளர்களுக்கும் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அதிகரிக்க அக்கட்சி நினைக்கிறது. இதற்காக பூத் அளவில் உள்ள பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை வீடு வீடாக அனுப்பி, மோடிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்.,ஸிடம் பேசிய அமித்ஷா, 2014 தேர்தலில் பா.ஜ.,வுக்கு 31 சதவீத ஓட்டுகள் கிடைத்தையும், இதை 50 சதவீதமாக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

2014 தேர்தலில் 31 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றாலும் 282 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ., இம்முறை நோட்டாவால், ஓட்டுகள் வீணாகி விடக்கூடாதே என்ற கவலையும் பா.ஜ.,வை ஆட்டிப்படைக்கிறது.

250 இடங்கள்?


வரும் தேர்தலில் பா.ஜ., 250 தொகுதிகள் வரை வெற்றி பெறக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு வேளை நடந்தால் ஆட்சி அமைப்பதில் சிரமம் ஏற்படும். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சென்ற தேர்தலில் மொத்தம் 355 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை இக்கூட்டணிக்கு 285 இடங்கள் வரை கிடைக்கலாம். அதாவது, சென்ற தேர்தலைவிட 70 இடங்களை இழக்க வேண்டி வரலாம். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்க இது போதும்.

2014 தேர்தலில் 80 இடங்களில் வெற்றிபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 இடங்களில் ஜெயிக்கலாம். நடப்பு லோக்சபாவில் வெறும் 44 எம்.பி.,க்களை மட்டுமே வைத்திருக்கிறது காங்., இக்கட்சி மட்டும் வரும் தேர்தலில் 82 இடங்களில் வெற்றி பெறலாம் என்கிறார்கள்.

முதல் வாக்காளர்கள்:


மோடி ஆட்சிக்கு வருவதும் வராமல் போவதும், வரப்போகும் தேர்தலில்

Advertisement

முதல்முறை ஓட்டளிக்கப் போகும் 8.1 கோடி வாக்காளர்களின் கையில் இருக்கிறது என பா.ஜ., நம்புகிறது. 18 முதல் 23 வயதுள்ள இந்த வாக்காளர்கள், 29 மாநிலங்களில் 282 தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்றனர். இதில் 20 தொகுதிகள், தமிழகத்தில் மட்டும் இருக்கின்றன என் தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரம் கூறுகிறது.

இவற்றில் 217 தொகுதிகள் 12 பெரிய மாநிலங்களில் அமைந்துள்ளன. அவை, மேற்கு வங்கத்தில் 32, பீகாரில் 29, உ.பி.,யில் 24, கர்நாடகாவில் 20, ராஜஸ்தானில் 17, கேரளாவில் 17, ஜார்க்கண்டில் 13, ஆந்திராவில் 12, மகாராஷ்டிராவில் 12, ம.பி.,யில் 11, அசாமில் 10.

வரும் தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால், சென்ற தேர்தலில் வெற்றி வித்தியாசத்தை விட, இவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-மார்-201920:42:06 IST Report Abuse

elakkumananஐயோ ஐயோ, காண் கிராஸ் அறுபது வருசமா எத்தனை ஆணிகளை புடுங்கினார்கள்? அப்படி ...............னால், எதற்கு இந்த இந்தியன் இன்னமும் எவனாவது சாராயமும், பிரியாணியும் தருவானா அல்லது டோக்கன் தருவானா அல்லது என் accountla வேற யாராவது எச்ச பணம் போடுவானா ரெண்டாயிரம் ரூபா தருவானா அப்படின்னு தெரு முக்குலயே நிக்கிறானு கேக்குறது இந்து தீவிரவாதம், மத வாதம், எனவே, அறுபது வருசமா ஒரு .............யும் புடுங்காம இருந்ததையெல்லாம் ஆட்டைய போட்டு ஒரு ஒரு கோர்ட்டுலயா ஜாமீன் விற்கும் ஐரோப்பிய புகழ் இத்தாலி குடும்பத்திற்கு ஒட்டு போடுவதே மத சார்பின்மை. காவேரி பிரச்னையை தீர்த்து வச்ச மோடி ஒழிக. எல்லாரையும் வரி கட்ட சொன்ன மோடி ஒழிக. திருட்டு யாவாரத்தை , பொருள் பதுக்கலை ஒழித்தமோடி ஒழிக, பொருட்களின் விலை ஏற்றாமல் எச்சல் இலவசம் தராமல், நாட்டின் உரிமையை விட்டுத்தராத, ஜாதி மதம் மாறாத , எந்த ஜாமீனும் வாங்க வக்கில்லாத, நாட்டு நலனுக்காக இரவு நேரத்தை விமான பயணத்திலேயே செலவிட்டு பகல் முழுக்க உழைத்த நெஞ்சுரம் மிகுந்த மோடி ஒழிக. எல்லாரும் ஊழல்னா என்னான்னே தெரியாத, தெளிவாக திருடி, கோர்ட்டையும், மக்களையும் ஏமாத்தி, புறங்கையை நக்கிய , நக்க துடிக்கும் திருட்டு கட்சிக்குக்கும், நாட்டையே சொரண்டின, வெளிநாட்டு கட்சிக்கும், காஷ்மீர நாசப்படுத்தின கட்சிக்கும், மதசார்பற்ற முஸ்லீம் லீகுக்கும் ஒட்டு போடுவோம், மத சார்பற்ற இந்தியாவை காப்போம். இந்து தீவிர வாதத்தை வேரோடு அழித்து, முடிந்தால் இந்துக்களையும், அவர்களது நம்ம்பிக்கையும் அழித்து, மேலும் இதியாவையும் அழிக்க முசுலீம் லீக் மதசார்பற்ற கவுல் பிராமண கட்சிக்கே வாக்களிப்போம். மோடிக்கு வாக்களிக்கமாட்டோம். கருப்பு பலூன் விடுவோம், சன் டிவி பார்ப்போம், மானாட, மயிலாட பாப்போம். கொலைகாரனை பேட்டியெடுத்த கோவாலை போற்றுவோம், அவருக்கு ஒரு பாரத ரத்னா பார்சல் பண்ணுவோம். கூட்டமாக சேர்ந்து கொள்ளையடிக்க ஓட்டை போடுவோம். இப்படிக்கு டுமீல் டுமிழன் மற்றும் போராளிய்ஸ் .

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
12-மார்-201913:49:29 IST Report Abuse

Snake Babuஆட்சியில் மோடி பா.ஜ., புது திட்டம் அருமை ஐயா, ஆனால் என்ன சாதித்தீர்கள் என்று ஒட்டு கேட்பீர்கள், காங் சரியல்ல என்பது ஊரறிந்த ரகசியம், அந்த ஒரே காரணத்திற்காக மறுபடியும் அமர்வோம் என்று கனவு காணாதீர்கள், 5 வருடம் முழுமையாக ஆண்டீர்கள், அதனை பற்றி பேசுங்கள், ஊழல் இல்லை எங்கீறீர்கள், நல்லது, எவ்வளவு சேர்த்து வைத்தீர்கள், பண ஆட்சி ஊழல் ஆட்சி என்கீறீர்கள் எவ்வளவு பேரை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்தீர்கள் என்று கூறுங்கள், வெளிநாட்டுக்கு சென்று தொழிலை பெருக்குநீர்கள் என்று கூறுகிறீர்கள், எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்கினீர்கள், இதை பற்றி எல்லாம் பேசலாமே, தமிழத்தில் கேடுகெட்ட திமுக மெதேன் அது இதுக்குன்னு ஒப்பந்தம் போட்டது என்றீர்கள், அதில் எவ்வ்ளவு மக்கள் விரோத திட்டத்தை விரட்டினீர்கள், விலைவாசி எப்படி இருக்கிறது, அது எப்படி தேர்தல் தேதி அறிவிப்பதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை அவ்வளவாக ஏறவில்லை, அப்புறம் சர்ரென்று இருக்கிறது, விவசாயிகள் போராடும்போது நடிகையை பேட்டி காண்பது என்று காண்டு ஏத்துவது சரி ஒரு அய்யாக்கண்ணுக்காக அதுவும் ஆடி கார் அய்யாக்கண்ணுக்காக மற்ற விவசாயிகள் பார்க்காமல் விட்டீர்கள் என்று தற்போது மக்களுக்கு கூறுவீர்களா. வாங்க பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்று பாப்போம். இங்கே எல்லா அரசியல்க்கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதில் பிஜேபிக்கு இவ்வளவு பில்டப்பு, அப்படி என்னதான் சொல்கிறீர்கள் என்று பாப்போம் நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
12-மார்-201913:29:22 IST Report Abuse

தோலுரிப்பவன் இது மோடிக்கு கைவந்த கலை ஆயிற்றே காரியம் ஆகணும் என்றால்...து ஆட்சியை காப்பாற்ற பார்ப்பார் இதனில் தான் அன்றே கலைஞரை வீடு தேடி சென்று பார்த்தது

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X