இடைத் தேர்தல்களில் சறுக்கல்: பா.ஜ.,வின் ராசி!

Updated : மார் 12, 2019 | Added : மார் 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
இடைத் தேர்தல்களில் சறுக்கல்: பா.ஜ.,வின் ராசி!

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், இமாலய வெற்றி பெற்ற, பா.ஜ.,வுக்கு, கடந்த, நான்கு ஆண்டுகளில் நடந்த லோக்சபா இடைத் தேர்தல்கள் பெரும் சறுக்கலாகவே இருந்துள்ளன.
நான்கு ஆண்டுகளில் நடந்த, 27 லோக்சபா இடைத் தேர்தல்களில், பா.ஜ., 5ல் மட்டுமே வென்றுள்ளது; அதன் கூட்டணி கட்சி, ஒரு இடத்தில் வென்றது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில், நரேந்திர மோடி போட்டியிட்டு வென்றார். வாரணாசி தொகுதியின், எம்.பி.,யாக பதவியேற்ற அவர், வதோதரா தொகுதி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ., வென்றது. அதே ஆண்டு, மத்திய அமைச்சராக இருந்த, கோபிநாத் முண்டே விபத்தில் மறைந்ததால், மஹாராஷ்டிராவின் பீட் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வென்றது.





அதன்பிறகு, 2016ல், அசாமின் லகிம்புர், மத்திய பிரதேசத்தின் ஷாதோல் தொகுதிகளிலும், 2018ல், மஹாராஷ்டிராவின் பால்கார் தொகுதியிலும் வென்றது. கூட்டணி கட்சியான, என்.டி.பி.பி., எனப்படும், தேசிய ஜனநாயக மக்கள் கட்சி, நாகாலாந்து இடைத் தேர்தலில் வென்றது.இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த, 27 இடைத் தேர்தல்களில், 13 தொகுதிகள், பா.ஜ., வசம் இருந்தது. அதில், ஐந்தில் மட்டுமே வென்றுள்ளது. அதேபோல், மற்ற கட்சிகள் வென்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில், ஒன்றில் கூட, பா.ஜ., வெற்றி பெற முடியவில்லை.- கே.சத்யா -சிறப்பு செய்தியாளர்


Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
12-மார்-201914:10:05 IST Report Abuse
Snake Babu எண்ணங்கப்பா நாட்டில் நீங்கள் அதான் பிஜேபி நிறைவேற்றிய திட்டங்கள் கூறி ஒட்டுகேட்கவே மாட்டீர்களா, ராசி அது இதுனு பெனாத்திக்கிட்டே இருங்க. நாட்டு நிர்வாகம் என்பதெல்லாம் தேவையில்லை. மக்களை மூடப்பழத்திலே வைத்துருங்கவேண்டியது தலையாய கடமை. இதையும் மக்கள் கேட்க்கிறார்களே அதுதான் கொடுமை, தென்னகம் கொஞ்சம் பரவாயில்லை. நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-மார்-201912:52:10 IST Report Abuse
S.Baliah Seer ஒன்று செய்யுங்கள்.யாராவது ஒரு சோதிடனிடம் இந்த தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று சொல்லச்சொல்லுங்கள்.பின் செய்யவேண்டியதை செய்து நாட்டைப் பிடியுங்கள்.உங்கள் குறி எப்போதும் 5 வருட பார்லிமென்ட் மட்டுமே .இடைத்தேர்தல்கள் அல்ல.சிறியதை விட்டு பெரியதை எப்படியாவது பிடிப்பதுதானே உங்கள் நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
12-மார்-201911:00:13 IST Report Abuse
Ab Cd இடைத்தேர்தல் எல்லாம் வாக்கு சீட்டு அடிப்படையில் நடத்தப்பட்டது
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
12-மார்-201911:58:14 IST Report Abuse
parthaஎன்னே உமது பொது அறிவு, இந்தியாவில் எந்த தேர்தலிலும் இப்போது வாக்குசீட்டு கிடையாது...
Rate this:
Share this comment
Thiyagarajan B - Mumbai,இந்தியா
12-மார்-201912:36:27 IST Report Abuse
Thiyagarajan Bஇடை தேர்த்லிலும் வாக்கு எந்திரங்கள் தான் பயன் படுத்தப்பட்டன. உண்மையைப் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டீர்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X