பொள்ளாச்சி பாலியல் வழக்குல இறுகுது 'பிடி'

Added : மார் 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு, சித்ராவும், மித்ராவும் கிளம்பினர்.ஸ்கூட்டரை சித்ரா ஓட்ட, பின்னால் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் மித்ரா.அரசியல் போஸ்டர்களை கிழித்து, சுவர் விளம்பரங்களை சிலர் அழித்துக் கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''அக்கா, தேர்தல் பரபரப்பு துவங்கியிருச்சு போல; நம்மூர் களம் எப்படியிருக்கு.
 பொள்ளாச்சி பாலியல் வழக்குல இறுகுது 'பிடி'

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு, சித்ராவும், மித்ராவும் கிளம்பினர்.ஸ்கூட்டரை சித்ரா ஓட்ட, பின்னால் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் மித்ரா.அரசியல் போஸ்டர்களை கிழித்து, சுவர் விளம்பரங்களை சிலர் அழித்துக் கொண்டிருந்ததை பார்த்த மித்ரா, ''அக்கா, தேர்தல் பரபரப்பு துவங்கியிருச்சு போல; நம்மூர் களம் எப்படியிருக்கு. தகவல் கெடைச்சதா...'' என நோண்டினாள்.''என்ன மித்து, நம்மூரை அவ்ளோ சாதாரணமா எடை போட்டுடாதே. அந்தக்காலத்துல, மேற்கு மண்டலமும் தி.மு.க., கோட்டையா தாம்ப்பா இருந்துச்சு. இப்ப, ஏகப்பட்ட கோஷ்டிக உருவாகிட்டதுனால, ரொம்பவே 'வீக்' ஆயிட்டாங்க.''அதனால, கம்யூ., கட்சிக்காரங்களுக்கு தொகுதிய கொடுக்கப் போறாங்களாம். இ.கம்யூ., நடத்துன மாநாட்டுல, ஸ்டாலின் கலந்துக்கிட்டாரு. மா.கம்யூ., நடத்துன மாநாட்டுல, மேடை 'பேக்டிராப்ல' ஸ்டாலின் படத்தை பெரிசா அச்சிட்டிருந்தாங்க. தொகுதி வாங்குறதுக்கே, கூட்டணி கட்சிக்காரங்க முட்டிக்கிட்டா, தேர்தல் களத்துல எப்படி ஒண்ணா நின்னு, வேலைபார்க்கப் போறாங்களோ...''''அ.தி.மு.க., கூட்டணியிலும், பா.ஜ.,வுக்கு 'சீட்' கொடுக்கப்போறதா கேள்விப்பட்டேனே...''''ஆமாம்ப்பா, அப்படித்தான் சொல்றாங்க. தொழில்துறைக்கு மத்திய அரசு தரப்புல ஏகப்பட்ட வசதி செஞ்சு கொடுத்திருக்காங்க; மாநில அரசு தரப்பிலும், ஏகப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கியிருக்காங்க; வேலையும் நடந்துக்கிட்டு இருக்கு; சிலதுகளுக்கு அடிக்கல் நட்டுருக்காங்க. அதனால, எப்படியும் ஜெயிச்சிரலாம்னு கணக்கு போட்டுருக்காங்க...''''அந்தளவுக்கு அ.தி.மு.க., 'வீக்'கா இருக்கா, என்ன...?''''என்ன மித்து, இப்படி கேட்டுட்டே... ஜெ., இறப்பு, தினகரன் கட்சி துவங்கியதுக்கு பிறகு, நம்மூர்ல எந்த தேர்தலையும், அ.தி.மு.க., சந்திக்கல. தொண்டர்கள் எந்த அணியில இருக்காங்கன்னு தெரியலை,''''தொகுதியை கைவிடக்கூடாதுன்னு நெனைச்சாங்கன்னா, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிக்கிற தொகுதியிலும், அ.தி.மு.க.,காரங்க செலவழிச்சு, வேலை பார்க்க வேண்டிய சூழல் இருக்கு,'' என்ற சித்ரா, ''சூட்கேஸ் கொடுத்தது வில்லங்கமா மாறிடுச்சாமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள்.''ஆமாக்கா, மாநகராட்சியில பட்ஜெட் கூட்டம் நடத்துனாங்க. வழக்கமா, ஒரு பேக்குல பட்ஜெட் புத்தகம் வச்சுக்கொடுப்பாங்க. இந்த வருஷம் சூட்கேஸ்ல வச்சுக்கொடுத்தாங்க. நேர்மையான செய்தியாளர்கள், கோபத்தின் உச்சிக்கு போயி, முறைச்சுப் பார்த்திருக்காங்க. உடனே, நீங்க, 'புக்' மட்டும் வச்சுக்கிங்கன்னு சொல்லிட்டு, சூட்கேஸ்களை, கார்ப்பரேஷன் ஊழியர்கள் எடுத்துக்கிட்டாங்களாம்...''''இதெல்லாம் சாதாரண விஷயம்... பெரிய அதிகாரிக்கு சூட்கேஸ் கைமாறியிருக்கும்னு பேசிக்கிறாங்களே...''''அதுவா, கார்ப்பரேசன்ல ரொம்ப வருஷமா, 'பொறுப்பு'ல இருந்த அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு கொடுத்திருக்காங்க. 'நார்த் ஜோன்'ல இருக்கற ஒரு அதிகாரி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சந்திச்சிருக்காரு. சூட்கேஸ் கைமாறியிருக்கும்னு சொல்றாங்க...''''அரசாங்க உத்தரவு போட்டதால, பதவி உயர்வு கொடுத்திருக்காங்க. இதைப்போயி, முடிச்சுப் போட்டு பேசுறீயே...''''அது போகட்டுங்கா, இப்ப, 'நார்த் ஜோன்'ல இருந்து, ஒரு 'லேடி' அதிகாரி, மெயின் ஆபிசுக்கு வந்திருக்காங்க. அந்தம்மா, 'சென்ட்ரல் ஜோன்'ல இருந்தப்ப, லஞ்ச ஒழிப்புத்துறை 'ரெய்டு' நடத்தி, ஒருத்தரை கையும் களவுமா பிடிச்சாங்க. அதுக்கப்புறம், 'நார்த் ஜோன்'ல வேலை பார்த்தப்ப, ஒருத்தரை கைது செஞ்சாங்க. இப்ப, மெயின் ஆபீசுக்கு வந்துருக்காங்க. யாரை சிக்க வைக்கப் போறாங்களோன்னு, பெரிய பெரிய அதிகாரிங்க, மதுக்கூடத்துல இருக்கற நேரத்துல பேசிக்கிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.''அதிருக்கட்டும், குருடம்பாளையம் பஞ்சாயத்துல லஞ்சம் வாங்கும்போது, கைது செஞ்ச, செயலாளர் பிரகாஷ், கொடுத்திருக்கிற வாக்குமூலம் உயரதிகாரிங்க வட்டாரத்துல, 'பீதி'யை ஏற்படுத்தியிருக்காமே...''''அப்படி, என்னத்தை அவரு சொல்லிட்டாருக்கா...'' என்று கேட்டாள் மித்ரா.''பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்துல வேலைபார்க்கும் உயரதிகாரிக்கு, ஒவ்வொரு ஊராட்சி செயலரும், வாரம் ரூ.20 ஆயிரம் 'கப்பம்' கட்டணுமாம். அதுக்காகத்தான் வாங்குனேன். இதுவரைக்கு யார் யாருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறேன்னு, பெரிய 'லிஸ்ட்' கொடுத்திருக்காரு. உயரதிகாரிங்க, அரசியல்வாதிங்க, செய்தியாளர்கள் பெயரும் இருக்காம். 'லிஸ்ட்'டை அடிப்படையா வச்சு, லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரங்க, விசாரிக்கப் போறாங்களாம்...'' என்று பதிலளித்த சித்ரா., ''பொள்ளாச்சி பாலியல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாத்தணும்னு சொல்றாங்களே... ஏன்'' என, கேட்டாள்.அதற்கு மித்ரா, ''அதுவா... ஆளுங்கட்சி பிரமுகரோட வாரிசும், இந்த கேசுல சம்பந்தப்பட்டு இருக்கறதா சொல்றாங்க. அதனால, யாரும் துணிச்சலா புகார் கொடுக்க வர முடியாத அளவுக்கு போலீஸ்காரங்களே, வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதுக்காக, பல கோடி ரூபாய் கைமாறியிருக்காம்,''''அட...அப்படியா?''''இன்னும் கேளு. சி.பி.சி.ஐ.டி., விசாரிச்சா, அரசியல்வாதிங்க மட்டுமில்ல; போலீஸ்காரங்களும் மாட்டுவாங்களாம். அதனால, முடிஞ்சவரைக்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நீர்த்துப்போக வைக்கிறதுக்கு, வேலை நடந்துக்கிட்டு இருக்கு...'' என்றவாறு, பேக்கரி ஒன்றில், ஸ்கூட்டரை ஓரம் கட்டினாள்.அவ்வழியாக, தனியார் கல்லுாரி பஸ் ஒன்று கடந்து சென்றது.''அக்கா, இந்த காலேஜ் நிர்வாகி ஒருத்தரு, பாரதியார் பல்கலை விஷயத்துல ஏகத்துக்கும் மூக்கை நுழைக்கிறாராம்...'' என்றாள் மித்ரா.''அந்த பல்கலைக்குதான், இப்ப துணைவேந்தர் இல்லையே...''''ஆமா. இப்ப, மூன்று பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இருக்கு; அந்தக்குழுவுக்கே கல்லுாரி நிர்வாகி 'ஆர்டர்' போடுறாராம்.... தன்னோட கல்லுாரி சார்ந்த 'பைல்'களுக்கு ஒப்புதல் வாங்குறது; ஒப்பந்தம் செய்றதுன்னு, எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறாராம். எல்லாம் சிவ மயம்னு சொல்லுவாங்க. இங்க, எல்லாம் சரவண மயம்னு பேசிக்கிறாங்க...'' என, சொன்னபோது, சூடாக லெமன் டீ வந்தது.இருவரும், டீயை ருசிக்க ஆரம்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
13-மார்-201915:17:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அம்மாண்டிம்மா எல்லாம் ரொம்பவே நேர்மையா இருக்க கார்பரேஷனிலே தான் சூட்கேஸா நம்பறோம் நம்பிட்டோம் தேர்தல்னா கருப்பைவெள்ளை அக்காவே என்பதுதான் எழுதாத சட்டமாச்சே கொண்டாந்து ஜெயிச்சவன் முகா தானே காங்கிரெஸ்க்காலத்துலே சில்லறை ஆஞ்சு ரூவா பத்துரூவா கூடவே பூஜ்யம் சேந்துண்டேபோறது கொடுப்பவன் கர்ணனும் இல்லே வாங்கிறவன் பிச்சைக்காரனுக்கு இல்லே அதுக்குள்ளியே தினகரன் குக்கர் தரானாமில்லே வெடிச்சு ஏவாளும் சாவாம் இருந்தால் ஓகே ரெட்டை இலை அதிமுகா ஏவாளும் வாரிவழங்காது திமுக க்கு உதய சூரியன் இப்போது கொளுத்தும் வெய்யில்லே விசிறியைத்தான் தரணும் திமுக காரனுக சுடாலின் mahaakanjaapisinaari உலகறிஞ்சா விஷயம் கனிமுழியும் கேக்காவே வேண்டாம் முக க்குப்பிறந்தவை இவ்விரண்டும்தான் மாறதெல்லாம் யாரோ தயாளும்மா க்குப்பிறந்தவையாம் முகாமுத்து பாவம் அனாதை ஒட்டுண்ணி துராய்முருகன் சபரீசன் எல்லாம் தான் இப்போதெல்லாம் சுடலைக்கு பக்கத்துணை துறை இப்போதே தான் பில்லாவியை கொண்டாந்துட்டான் ஆர்க்காடெல்லாம் ஏற்காடுக்கு போயாச்சாம் வெய்யில்காலம்னு திமுக அப்படியே தோற்கவேண்டும் தூத்துகுட்டிலே கிட்டும் பாட்டையா கனிமொழிக்கு கிட்டும் நாமம் என்ன ஆனால் ராஜ்யசபாமூலம் நுழைஞ்சு எம்பி ஆயிருவா கண்ராவி
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
14-மார்-201904:00:22 IST Report Abuse
meenakshisundaramகனி அக்காவை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்யட்டும்,முக குடும்பத்துக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.உண்மையான வாரிசுகளோடு இந்த 'வாரிசும்' சேர்ந்திருக்கு,?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X