'கழிப்பிடம் கட்ட கமிஷன் வெட்டு'எம்.பி.,க்கு 'சீட்' கொடுத்து 'மாஜி'யை ஓரங்கட்டு!

Updated : மார் 12, 2019 | Added : மார் 12, 2019
Advertisement
வெயில் கொளுத்தி எடுத்தி கொண்டிருந்த ஒரு மதியவேளை. சித்ராவும், மித்ராவும், அவிநாசி ரோட்டிலுள்ள ஒரு ஜூஸ் கடைக்குள் அடைக்கலம் புகுந்தனர். ஆர்டர் கொடுத்து விட்டு, சேரில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.''ஆளுங்கட்சிக்குள்ள திடீர்னு இப்படி திருப்பம் வரும்னு நினைக்கலைங்க்கா,'' ஆரம்பித்தாள் மித்ரா.''அப்படி என்னடி பெரிய திருப்பம் வந்திருச்சு,''''எல்லாம்
'கழிப்பிடம் கட்ட கமிஷன் வெட்டு'எம்.பி.,க்கு 'சீட்' கொடுத்து 'மாஜி'யை ஓரங்கட்டு!

வெயில் கொளுத்தி எடுத்தி கொண்டிருந்த ஒரு மதியவேளை. சித்ராவும், மித்ராவும், அவிநாசி ரோட்டிலுள்ள ஒரு ஜூஸ் கடைக்குள் அடைக்கலம் புகுந்தனர்.


ஆர்டர் கொடுத்து விட்டு, சேரில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.''ஆளுங்கட்சிக்குள்ள திடீர்னு இப்படி திருப்பம் வரும்னு நினைக்கலைங்க்கா,'' ஆரம்பித்தாள் மித்ரா.''அப்படி என்னடி பெரிய திருப்பம் வந்திருச்சு,''''எல்லாம் எம்.பி., 'சீட்' விவகாரம்தான். தாங்க்கா... திருப்பூர் தொகுதி அ.தி.மு.க.,வுக்கே வந்திருச்சுனா, யார் வேட்பாளர்னு பெரிய போட்டியே நடந்துட்டு இருக்கு. போன தடவ, ஈரோடு மாவட்டத்துக்கு 'சீட்' கொடுத்ததால், இந்த தடவ, திருப்பூருக்குத்தான் 'சீட்'டாம்,''''எந்த பதவியும் இல்லாம இருக்கற 'மாஜி'தான், குறி வச்சிருக்காரு. தானும் ஒரு பதவிய பிடிக்கனும்னு தீவிரமா இருக்காராம்''''இதுல திருப்பம்னு என்ன இருக்கு'' என்றாள் சித்ரா.''சொல்றேங்க்கா. இப்ப நிலைமை மாறிடுச்சாம். எலியும் பூனையுமா இருந்த குணமான எம்.எல்.ஏ.,வும், அவருக்கே 'சீட்' குடுத்திடுங்கன்னு, சி.எம்., கிட்ட சிபாரிசு செஞ்சாராம். அதைத்தான் திருப்பம்னு சொன்னேன்,''''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''ஹலோ... ஜூஸ் என்னாச்சு?'' என்று சப்ளையரிடம் கேட்டதற்கு, ''ஒரு நிமிஷம் மேடம்,''என்று சொல்லி சென்று, கொண்டு வந்தார்.''ஏதோ இந்தளவு மின் வெட்டு இல்லை என்பதால், கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடிகிறது. இல்லையென்றால் இன்னும் எவ்வளவு அவதிப்படணும்,'' என்று ஜூஸ் குடித்து கொண்டே கேட்டாள் மித்ரா.''மின் வெட்டுனு சொன்னதும் ஒரு மேட்டர் நினைவுக்கு வருது. கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை ஊழியர்கள் துண்டிப்பதில்லையாமே,'' என்றாள் சித்ரா.
''ஆமாங்க்கா. நானும் கேள்விப்பட்டேன். இணைப்புகளை துண்டிப்பது குறித்து அதிகாரிகள் பதிவு செய்து, ஊழியருக்கு தகவல் தருவர். ஆனால், இப்போதெல்லாம், மின் இணைப்பு துண்டிப்பு என பதிவில் மட்டும் செய்து விடுகின்றனராம்,''என்றாள் மித்ரா.''கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டிக்கவில்லை என்றால் கட்டட உரிமையாளருக்கு வசதிதானே,'' என்றாள் சித்ரா.''அதெப்படி? திடீரென பறக்கும் படையினர் ஆய்வு செய்தால், அலுவலக பதிவுகளில் துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்பில் பியூஸ் கேரியர் அகற்றாமல் மின்சாரம் பயன்படுத்தி கொண்டிருந்தால், அதை மின் திருட்டு என பதிவு செய்து, பெரும் தொகை கட்ட வேண்டி வந்து விடும்,''''அதிலும், தங்களுக்கு கணி்சமான லாபம்தானே என, அதிகாரிகளும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களாம்,'' என்றாள் மித்ரா.''ஏண்டி மித்து, அதிகாரிங்க, 'ரூம்' போட்டு யோசிப்பாங்களோ?''என்று கூறி சிரித்து, கொண்டே ''மானிய திட்டத்துக்கு இவ்வளவு 'சார்ஜ்' பண்றாங்களா,'' கேட்டாள் சித்ரா.''என்னது அரசு திட்டத்துக்கு, 'சார்ஜ்' பண்றாங்களாங்க்கா'' என்றாள் மித்ரா. ''மத்திய அரசு திட்டத்தில், மானியமா 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கறாங்க; அப்படி இப்படினு, திருப்பூர் யூனியன்லயே இந்த அநியாயம் நடந்துட்டு இருக்கு; 'அட்வான்ஸ்' கொடுங்கன்னு, அஞ்சாயிரத்தை வாங்கிட்டு, இழுத்தடிக்கறதே வேலையா போச்சாம்,''''ஏங்க்கா... அதேபோல், நுாறு நாள் திட்டத்துல, ஏகத்துக்கும் பணம் விளையாடுதாம்,'''ஆமாண்டி, 'நுாறு நாள் திட்டத்துல, விவசாயிகள் நிலத்துலயும் வேலை செய்யறாங்க; தொழிலாளர் கணக்கு காட்றதுல 'கோல்மால்' பண்ணி, இஷ்டத்துக்கு பணத்த வாங்கிடறாங்களாம். அதுலயும், சில பணித்தள பொறுப்பாளருங்க, வேலைக்கு வராதங்களோட 'பாஸ் புக்' வாங்கி, அதுல கணக்கு காண்பிச்சு, பணத்த எடுக்கறாங்களாம்,''''அதிகாரிங்க கழுகு பார்வையில இருந்து தப்ப முடியுமா என்ன?''''
அவங்களுக்கு தெரிஞ்சேதான் இந்த 'கோல்மால்' நடக்குதுனு, கிராமத்துல இருக்க சமூக ஆர்வலர்கள் கொதிச்சு போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.பில் கொடுத்து வி்ட்டு வெளியே வந்ததும், மித்ராவின் மொபைல்போன், ''காசு.. பணம்... துட்டு... மணி..மணி'' என அழைத்தது. எடுத்து பேசிவிட்டு வைத்தவுடன், ''அக்கா... இந்த பாட்டை கேட்டவுடன், 'குட்கா' மேட்டர் நினைவுக்கு வந்துடுச்சு,''என்றாள்.''என்னது, சொல்லு''''காங்கயம் ரோட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஸ்டேஷனில், பணம் சம்பாதிப்பதில் ஸ்டேஷன் அதிகாரி ரொம்ப கண்ணும் கருத்துமாக இருக்கிறார்,''''பெட்டிக்கடை, பேக்கரிகளில் 'குட்கா' விற்பவர்களை சிலரை போலீசார் பிடித்து கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில், விடுவித்தனர். ஆனா, அதுக்கு தலைக்கு, 20 ஆயிரம் வரைக்கு துட்டு கேட்டு இருக்கிறாராம். இதைக்கேட்டுட்டு, ஸ்டேஷன் போலீசார் வெடவெடத்து போய் நின்னுட்டாங்க. அப்புறம், ஏதோ குறைச்சு போட்டு, அவுங்க கொடுத்ததை வாங்கிட்டு விட்டாராம்,''மித்ரா விளக்கினாள்.
''டாலர் சிட்டி'னு நினைச்சு, அவரும் சம்பாதிக்க ஆசைப்படறாரு போல தெரியுது. அளவுக்கு மீறினால், 'தேவ'லோகத்துல உள்ள 'ராஜன்'என்றாலும், அமுதமும் நஞ்சுதான்டி, மித்து''என்ற சித்ரா, ''இந்த மேட்டரை கேளேன்,'' என, வண்டியை ஸ்டார்ட் செய்தவாறே கூறினாள்.''சொல்லுங்கா''என்றவாறு, சித்ரா, பில்லியனில் அமர்ந்தாள்.''காளைக்கு பேர் போன ஊரில் இருந்த ஸ்டேஷன் எஸ்.பி., தனிப்பிரிவில் இருந்தவங்களை, சமீபத்தில் பக்கத்திலுள்ள ஸ்டேஷன் 'டியூட்டி'க்கு மாத்திட்டாங்க. புதிய ஆளு பொறுப்பு ஏத்துகிட்ட பிறகும், பழைய இடத்துக்கு வந்து, 'மது'க்கடை பாரில், போன மாசத்துக்கான, 'வரி'யை வசூல் செஞ்சுட்டு போயிருக்காரு. இதை கேள்விப்பட்டு, புதுசா வந்தவரு, 'டென்ஷன்' ஆயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.சிக்னலில் சிகப்பு வரவே, வண்டியை நிறுத்தினாள் சித்ரா. அப்போது, ஒரு காருக்கு பின், 'விஜயசேகரன் நடிக்கும் 'பட்டைய கிளப்பட்டுமா?' என்ற சினிமா ஸ்டிக்கர் தென்பட்டது.''அக்கா.. அதேமாதிரி. பல வருஷமா, ஒரே ஸ்டேஷனில், ராஜங்கம் நடத்தி வந்த எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரங்க நிறைய பேரை, டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க. இடத்தை பறி கொடுத்தவங்க, பழைய இடத்தை மீண்டும் பிடிக்க, கட்சிக்காரங்க 'சிபாரி'சை தேடி அலைஞ்சுட்டு இருக்காங்களாம்,''''உண்மைதான் மித்து, அதேபோல, 'சிட்டி' போலீஸ்சில் இருக்கிற, ஐ.எஸ்., போலீஸ்காரங்களையும் மாத்துன, நல்லாத்தான் இருக்கும். தான் இருக்கு. ஆனா, 'பொலிடிகல் இன்புளூயன்ஸ்' சிலருக்கு இருக்குதுன்னு, கொஞ்சம் யோசிச்சாங்க. புதுசா வந்த அதிகாரியாவது, செய்வாரான்னு பார்ப்போம்,''என்றாள் மித்ரா.
பச்சை விளக்கு எரிந்தவுடன், வண்டியை கிளப்பிய சித்ரா, ''முன்னாள் எம்.எல்.ஏ., புகார் கொடுத்துருக்கிற தகவலில் ஒன்னு இருக்கு மித்து,'' என்றாள்.''காளைக்கு பேர் போன ஊர்ல இருக்கிற முன்னாள் எம்.எல்.ஏ., பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவரிடம் தொழில் நிமித்தமாக வரவு, செலவு வச்சுருந்தாரு. அந்த நபரே வாங்குன சரக்குகளுக்கு பணம் தராம ஏமாத்திட்டாராம்,'
'''இது சம்பந்தமாக, போலீசில் புகார் கொடுத்தாராம். விஷயம் வெளியில் தெரியாம, சி.எஸ்.ஆர்., மட்டும் பதிவு செஞ்சிருக்காங்க. ஏமாத்துனது பொள்ளாச்சிக்காரர் என்பதால், அந்த ஊாரை சேர்ந்த ஆளுங்கட்சி பெரிய புள்ளி மூலமாக பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு,'' என்ற சித்ரா, ''எலக்ஷன் டேட் அறிவிச்சிட்டாங்க. இனி, தகவல்களுக்கு பஞ்சமே இருக்காது மித்து,'' என, சொல்லி, வேகத்தை கூட்டினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X