சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கை சி.பி.ஐ., மாற்ற முடிவு?

Updated : மார் 12, 2019 | Added : மார் 12, 2019 | கருத்துகள் (121+ 41)
Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சமூக வலை தளங்கள் மூலம் பழகி பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில், சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளைஞர்கள் 4 பேர் கல்லூரி மாணவிகளிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக படமெடுத்து சித்ரவதை செய்தனர். இந்த வழக்கில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தற்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் இந்த வழக்கு திசை மாறுகிறது எனவும் தகவல்கள் வெளியாகின்றன.


குண்டர் சட்டம்

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜ் விளக்கம் அளித்தார். இதில் அரசியல் இல்லை என்றும் , குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதாகவும் எஸ்.பி., கூறினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (121+ 41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
17-மார்-201913:23:11 IST Report Abuse
oce இங்கிருந்து அங்குமாற்றுவது அங்கிருந்து இங்கு மாற்றுவது. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆக போகிறது.
Rate this:
Share this comment
Cancel
D.SURIYA KUMAR - chenna,இந்தியா
16-மார்-201915:01:15 IST Report Abuse
D.SURIYA KUMAR இவர்களுடைய காம உருப்புகளை வெட்டி தல்லுங்கய்யா?ஸ்வாதி என்ற பெண்ணை தொட்டவனையே நிர்மூலமாக்கிய காவல் துறையினர் இப்படிப்பட்ட காமுகங்களை விட்டு வைக்க்கக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
15-மார்-201913:44:45 IST Report Abuse
praj சுட்டு தள்ளுங்கப்பா.. சிபிஐ எல்லாம் வெறும் கண்துடைப்பு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X