பொது செய்தி

இந்தியா

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை?

Updated : மார் 12, 2019 | Added : மார் 12, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, அனைத்து சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை அளிப்பது தொடர்பான பேச்சு, சுமுகமாக முடிந்து உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.latest tamil newsநாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில், பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நடைமுறை 2015ம் ஆண்டு, செப்.,ல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, வங்கி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தொடர்பாக, நடந்த பேச்சில் சுமுக நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil newsஇதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறைதான். ஆனால், வங்கிகள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. இதனால், அனைத்து சனிக்கிழமையும் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வந்தோம். இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பிடம், வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர் பேச்சுநடத்தினர். இதில் தற்போது சுமுகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முடிவு அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு பின், முடிவுகள் அறிவிக்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
18-மார்-201913:32:12 IST Report Abuse
G.Krishnan சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பதை விட்டுவிட்டு, குறைவான ஊழியர்களை வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்யலாமே? ஞாயிற்று கிழமைகளிலும் கூட சில ஊழியர்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சேவைகளை மட்டும் செய்யலாம் ஊழியர்களுக்கு மனமிருந்தால், வங்கி அமைப்பு என்பது சேவை என்பதை மறந்து, அது ஏதோ கார்பொரேட் கம்பெனிகளை போல வாரத்தில் 5 நாட்கள் வேலைநாட்களாக செயல்படுத்துவது சரியானதா?
Rate this:
Cancel
Madhu - Trichy,இந்தியா
15-மார்-201909:36:01 IST Report Abuse
 Madhu இப்படியே போனால் சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகள் இயங்கும் எனும் நிலைமை ஏற்படலாம். நாட்டின் உற்பத்தி பெருக வேண்டுமானால் பொருளாதாரம் சிறக்க வேண்டுமானால் அனைத்து துறைகளும் 24 மணி நேரமும் 'ஷிப்ட்' அடிப்படையில் இயங்க வேண்டும் இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தொழிலாளிகளுக்கு விடுமுறையை அதிகரிக்கலாம் தவறு இல்லை. ஆனால் மக்களுக்கு அனைத்து விதமான சேவைகளும் தடையின்றி கிடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மார்-201910:38:41 IST Report Abuse
A.George Alphonse It is better for the Government to Scrap all the Thozhil Saingaingal of the Banks and revert the old Private tem in order to get more banks customers and also to improve the Banks' performance as the present tem is very bad and worst.All banks employees are enjoying more holidays and monitary benefits without doing any hard works at present.The government should not consider or accept the demands of the banks for their personal gain now and then.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X