அரசியல் செய்தி

தமிழ்நாடு

மவுனம் கலையுமா; மர்மம் விலகுமா?

Updated : மார் 13, 2019 | Added : மார் 13, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: சிகிச்சைக்கு பின் அமைதி காக்கும், விஜயகாந்த், இன்று(மார்ச் 13) நடக்கும் நேர்காணலில், மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு, தே.மு.தி.க.,வினரிடம் எழுந்துள்ளது.



latest tamil news



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நிலை பாதிப்பால், 2014 முதல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது; அதில், முன்னேற்றம் இல்லை. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில், இரண்டு முறை, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து, விஜயகாந்த், தற்போது வீடு திரும்பியுள்ளார். ஆனால், அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. பார்வையிலும் கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது; நடக்கவும் முடியவில்லை; பேசுவதிலும் பிரச்னை உள்ளது. அருகில் இருக்கும் நபர்கள் கூறுவதை மட்டுமே, அவரால் உணர முடிகிறது.


latest tamil news



விஜயகாந்த், நலமுடன் இருப்பதாகவும், அவரது பிரசார திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும், பிரேமலதா, தொடர்ந்து கூறி வருகிறார். இது, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு செய்யும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், விஜயகாந்தின் நடவடிக்கைகளை, 'டிவி'யில் பார்த்தே, அவரது உடல்நிலை குறித்து, நிர்வாகிகளும், தொண்டர்களும் தெரிந்து கொண்டனர்.


latest tamil news



இந்த நிலையில், இன்று, வேட்பாளர் தேர்வுக்காக, கட்சியினரிடம், விஜயகாந்த் நேர்காணல் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் நேர்காணலிலாவது, விஜயகாந்த், மவுனம் கலைப்பாரா என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மார்-201913:15:29 IST Report Abuse
பாலா விஜயகாந்த் கு பழையமாதிரி பேசுவுதில் சிரமமாக உள்ளது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
13-மார்-201909:01:00 IST Report Abuse
Suri பிரேமலதா மற்றும் சுதீஷ் எப்படிப்பட்டவர்கள் என்று இப்பொழுது அனைவருக்கும் தெளிவாகிறது. இன்னுமா DMDK தொண்டர்கள் அவர்களை நம்பி அங்கு இருக்க வேண்டும்? பண பேரம் நடத்தும் , double timing செய்பவர்களை ...என்று அழைப்பார்கள்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மார்-201908:16:15 IST Report Abuse
Srinivasan Kannaiya அவரை பொம்மையாகதான் பிரேமலதாவும் சுதிரும் உபயோகிக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X