சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் : இன்று ஓட்டெடுப்பு

Updated : மார் 13, 2019 | Added : மார் 13, 2019 | கருத்துகள் (22)
Advertisement

நியூயார்க் : ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இன்று விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த உள்ளது.காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டன் சென்றுள்ள வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பே உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியும் அமெரிக்காவின் ஆதரவைக் கோரி பல்வேறு தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதும் சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்காவிட்டால் மசூத் அசார் மீது தடை விதிக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மார்-201913:36:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சீனா அப்படி ஆட்சேபம் தெரிவித்தால் அவர்கள் நேரிடையாக இந்தியாவின் எதிரிகள் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நம் நாட்டை , சமூகத்தை அழிப்பதற்காக செயல்படும் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறார்கள் , இம்முறையும் அதையே செய்தால் நாம் சீனாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். இப்படி செய்தால் கத்தியின்றி , ரத்தம் இன்றி சீனாவை பணியவைக்க முடியும். சீனாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருட்கள் இங்கே தான் விற்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-மார்-201913:23:56 IST Report Abuse
arabuthamilan ஒசாமா பின் லேடனை அமெரிக்கா போட்டுத்தள்ளியது போல் பயங்கரவாதி மசூத் அசாரை துல்லியமாக போட்டுத்தள்ள வழி பாருங்கள் .. இந்த காரியத்தை செய்வதற்கு வாய்ச்சொல் வீரர். ஊர் சுற்றும் வீரர மோடியை செய்யச் சொல்லலாமே. இதற்க்கு மட்டும் ஒரு கிருஸ்தவ நாட்டை சார்ந்து இருக்கிறீர்கள். ஏன் இந்து நாடு என்று சொல்லிக்கொண்டிருக்கும் பாஜகவினர் மோடியை அனுப்பலமல்லவா?
Rate this:
Share this comment
Jayasankar Sundararaman - Chennai,இந்தியா
13-மார்-201916:09:17 IST Report Abuse
Jayasankar Sundararamanராகுல் தான் பெஸ்ட் சாய்ஸ் . சாணக்யருக்கு நிகரான முளை உள்ளவர்....
Rate this:
Share this comment
Balaji - Kuala Lumpur,மலேஷியா
15-மார்-201914:03:26 IST Report Abuse
Balajiஎப்ப பார்த்தாலும் இந்தியா அண்ட் மோடி பத்தி முட்டாள் தன்மை பேசாதே.....
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
13-மார்-201912:33:47 IST Report Abuse
pattikkaattaan ஒசாமா பின் லேடனை அமெரிக்கா போட்டுத்தள்ளியதுபோல் பயங்கரவாதி மசூத் அசாரை துல்லியமாக போட்டுத்தள்ள வழி பாருங்கள் .. காசுக்காக ஒருவன் கண்டிப்பாக காட்டி குடுப்பான் .. முள்ளை முள்ளால் எடுங்கள்
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
13-மார்-201913:10:37 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comமிகவும் சரி. இஸ்ரேல் பாணி தான் லாயக்கு. ஆனால் அதற்கு ராகுல் சரிபட்டு வரமாட்டார், மோடி மீண்டும் வெற்றி பெற்றால் அவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கலாம். அதற்கு முன் இந்தியாவில் இருக்கும் புல்லுருவிகளை வேரறுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
13-மார்-201913:31:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்அப்படி தாக்குதல் நடத்தப்பட்டு அதில் நம் வீரர்கள் இறந்தால் உடனே ஓநாய்கள் ஊளையிட ஆரம்பித்து விடுமே. தினம் தினம் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு இறக்கும் வீரர்கள் , பொதுமக்களை பற்றி இவர்களுக்கு கவலையில்லை. மோடியை பழிக்க ஏதாவது காரணம் கிடைக்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X