பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 13, 2019
Advertisement

வேகத்தடையில் அழிந்த கோடுகள்: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வீரராக்கியம் பிரிவு சாலையில், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதில், போடப்பட்டிருந்த வெள்ளைக் கோடுகள் தேய்ந்து மறைந்துவிட்டன. அதன் அருகே, எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். இரவில், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
பலவீனமான குடிநீர் தொட்டி: கரூர் சணப்பிரட்டி அருகே, மூலக்காட்டனூரில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் வகையில், மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டி கட்டி பல ஆண்டுகளான நிலையில், சரியான பராமரிப்பில்லாததால், ஆங்காங்கே காங்கிரீட் பெயர்ந்து காணப்படுகிறது. கீழ் பகுதியில் காரை பெயர்ந்துள்ளதால், தொட்டி பலவீனமான நிலையில் உள்ளது. தொட்டியை சீரமைக்க வேண்டும்.

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்: கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லைநகரில் சாலையில் உள்ள மின் கம்பங்களில் கேபிள் ஒயர்களை கட்டி வைத்துள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலை உள்ளன. கம்பிக்கு அருகிலேயே ஒயர் உள்ளதால், அதன் மூலம், மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. ஆனால், அதையும் மீறி, ஆபத்தான முறையில், உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் வழியாக, கேபிள் ஒயர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மின்கம்பங்களை தனியார் பயன்படுத்திக் கொள்வதை தடுக்க வேண்டும்.

சாலை பள்ளங்களால் தடுமாற்றம்: கரூர் - திருச்சி சாலையில், புலியூர் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை பின்புறம் உள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் இவ்வழியாக, இரு சக்கர வாகனங்களில், கரூர் நகருக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது. பணி முடிந்து இரவில் வரும் தொழிலாளர்கள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

நிழற்கூடத்தில் குப்பை கூளம்: கரூர் அடுத்த மூலக்காட்டனூர் பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது அந்த நிழற்கூடம் சேதமான நிலையில் உள்ளது. பயணிகள் அங்கு அமர முடியாத அளவுக்கு, குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. நிழற்கூடம் முன், தொலைபேசி வயர் பதிக்க குழி தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நிழற்கூடத்தை சீரமைக்க கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X