ஓட்டளிப்பது நம் கடமை: மோடி வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓட்டளிப்பது நம் கடமை: மோடி வேண்டுகோள்

Updated : மார் 13, 2019 | Added : மார் 13, 2019 | கருத்துகள் (17)
Share
புதுடில்லி : ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து துறை சார்ந்த பிரபலங்களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர், வரும் லோக்சபா தேர்தலில் அதிகமானவர்கள் ஓட்டளிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என ராகுல், மம்தா, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி, ஸ்டாலின்

புதுடில்லி : ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து துறை சார்ந்த பிரபலங்களையும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.



latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர், வரும் லோக்சபா தேர்தலில் அதிகமானவர்கள் ஓட்டளிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என ராகுல், மம்தா, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி, ஸ்டாலின் ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். நமது ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகமானவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


latest tamil news


பல்வேறு மாநில முதல்வர்கள், ஆன்மிக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், என்எஸ்எஸ், என்சிசி, ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், பிடிஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் ஓட்டளிப்பது நமது உரிமை மட்டுமல்ல; கடமை என்பதையும் புரிய வைக்க வேண்டும் என மோடி தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news



2019 லோக்சபா தேர்தலில் அதிக அளவிலான இந்தியர்கள் ஓட்டளிக்க வேண்டும். தங்களின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிவோரையும் ஓட்டளிக்க வலியுறுத்த வேண்டும் எனவும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X