மோடி வெற்றிக்கு உழைக்கும் 50 நாட்டு குழுக்கள்

Updated : மார் 13, 2019 | Added : மார் 13, 2019 | கருத்துகள் (82)
Advertisement

புதுடில்லி: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் 50 நாடுகளில் உள்ள 2500 அவரது ஆதரவாளர்கள், இரவு பகலாக உழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.தனி ஐ.டி., வாட்ஸ்ஆப்


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் பலர் மோடியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் தங்களுக்குள் தனி ‛ஆன்லைன்' குழுவை துவக்கி பொதுவான மெயின் ஐ.டி., வாட்ஸ்ஆப் குழு ஆகியவற்றை உருவாக்கி உள்ளனர். சமூக வலை தளங்களில் இவர்கள் ஒருவரை ஒருவர் ‛பாலோ' செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், கான்பெரா மற்றும் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், மலேசியாவில் உள்ளனர். 2014 தேர்தலில் இவர்கள் இப்படி இயங்கவில்லை. மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., உடன் தொடர்புள்ள இவர்கள், சமூகவலை தளங்களில் ரகசியமாகவும் இயங்குகின்றனர். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 2 மூத்த பா.ஜ., தலைவர்களை நியமித்திருக்கிறார் கட்சி தலைவர் அமித்ஷா.

இவர்கள் தனித்தனியாக இந்தியாவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு போன் செய்து, மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். உதாரணமாக சிட்னியிலோ மெல்போர்னிலோ உள்ள ஒருவர், தங்கள் சொந்த ஊருக்கு போன் செய்து, மோடிக்கு ஓட்டளிக்குமாறு கேட்பார். இவர்கள் பேசுவதற்காக 20 அரசியல் பிரச்னைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மோடி அரசின் சாதனைகளை உள்ளூர் மொழியிலும் ஆங்கிலத்திலும் இவர்கள் கூறுவர். இந்தியாவில் தான் ஒரு முறைக்கு ஒரு மெசேஜை 5 பேருக்கு மட்டுமே பார்வர்டு செய்ய முடியும். ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற கட்டுப்பாடு இல்லை. அங்கெல்லாம் ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் 500 பேரைக்கூட சேர்த்துக்கொள்ளலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஐ.டி., நிபுணர்கள், தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்த வீடியோக்களை உருவாக்குகிறார்களாம். இது போக, பா.ஜ., உறுப்பினர்கள், மத்திய அரசின் திட்டங்களால் பலன் அடைந்தோரின் போன் எண்களையும் தேடிப்பிடித்து பெற்றுள்ளனர். மோடிக்கு வாக்களிக்குமாறு இவர்கள் வெளிநாடுகளில் இருந்து போனில் பேசும்போது, நிறைய பலன் கிடைக்கும் என்று பா.ஜ., நம்புகிறது. பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு திறமை உள்ளது. இக்குழு தான் வெளிநாட்டு குழுக்கள் உள்பட அனைத்து குழுக்களையும் கண்காணிக்கிறது. இவர்கள் முயற்சியால், ஒரு சதவீத ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கூடுதலாக கிடைத்தால் போதும் என்று ஐ.டி., பிரிவு நினைக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - CHENNAI,இந்தியா
17-மார்-201910:44:21 IST Report Abuse
Siva Kumar நீட் தேர்வு திறமை அடிப்படையில் மருத்துவர் உருவாக, ஜி எஸ் டீ வரி சரியாக அரசுக்கு செல்வதற்கு (கணக்கில் வராத அமைப்புகள் கொள்ளை தடுக்க), அம்பானி அதானி கார்பொரேட் என்கிறார்கள் ஆநாள் அவர்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்கி இந்தியா மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுப்பவர்கள், ஜியோ, ரிலையன்ஸ் கம்பெனிகளில் எத்தனை இந்தியர்கள் பனி புரிகிறார்கல் என்று தெரியுமா, இந்தியா ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்திய ஒரே பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே, ரூபாய் மதிப்பிழப்பு கொள்ளை அடுத்தவர்களுக்கு மட்டுமே சிரமத்தை கொடுத்தது நம்முடைய பணம் நம்மிடம் தான் இருக்கிறது, தவறான பிரச்சாரம் செய்து பணத்தை ஏடுத்துகொண்டனர் என கூறுவது பொய், மோடி அவர்கள் மட்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படுகிறார், மேலும் சிறுபான்மையினர் எவரும் இந்த நாட்டை விட்டு வெளியே சென்று விட வில்லை. அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நலனும் பாதுகாக்கப்படுகிறது. ஒரு வேண்டுகோள், இனி பிரச்சாரம் செய்யும் போது எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறோம் என்று பிரச்சாரம் செய்தால் நன்றாக இருக்கும் (மாறாக மற்றவர்களை குறை கூறுவதை விடுத்து). வோட் போர் பிஜேபி . வாழ்க மோடி. வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
18-மார்-201917:41:28 IST Report Abuse
Rajavelu E.குள்ளநரிதானமாக நீட் கொண்டுவரப்பட்டுள்ளது, முதலில் எல்லா கிராமங்களிலும், நகரத்திலும், மாநிலத்திலும் ஒரேமாதிரியான கல்வி முறையை அமல் படுத்திவிட்டு பிறகு நீட் கொண்டுவந்திருந்தால் அது சரியானது, இப்போது கொண்டுவந்துள்ள நீட் பணக்காரர்கள், மற்றும் மேல்ஜாதியினருக்கான முறைகேடான செயல்....
Rate this:
Share this comment
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201900:01:51 IST Report Abuse
Chinnappa Pothiraj இதுநாள்வரையில் திரு சிதம்பரம் அவர்கள் திரு நரேந்திர மோதியின் அவர்களின் செயல்பாட்டையும் அரசையும் விமர்சித்து வந்தார் சில தினங்களுக்கு முன்பு தான் திரு சிதம்பரம் அவர்கள் காங்கிரஸை விட அதிவிரைவான வளர்ச்சிப்பணிகளை தின சதவீத அடிப்படையில் அதாவது daily basis முறையில்செயல்பட்டதாக திரு சிதம்பரம் அவர்கள் புகழ்ந்து பேசியுள்ளார். உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது திரு நரேந்திர மோடி அவர்களை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாக சில சில எதிர்ப்பாளர்கள் என்று சொல்வதா இல்லை தேசத்துரோகிகள் என்று சொல்வதா எப்படி என்று சொல்வது . இப்படி ஒரு நேர்மையான தலைவரை பெற்றுள்ளோம்.மக்களின் வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றே குறிக்கோள் என்று நேர்மையாக உறுதியுடன் உழைக்கும் திரு நரேந்திர மோடி அவர்களை விமர்சிப்பது என்னவென்று சொல்வது அவருக்கு எதிராகப் பேசுவது என்னவென்று சொல்வது. திரு அப்துல்கலாம் அவர்கள் நமக்கு கிடைத்தது ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ஆனால் காலத்தின் விதியால் நம் நாடு அவரை இழந்து விட்டது அதுவும் நமக்கு ஒரு பேரிழப்பு தான் நமக்கு திரு நரேந்திர மோதி அவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெறுவது நாம் பெற்ற மிகப் பெரிய அதிர்ஷ்டம். மக்களே தாங்கள் எதிராக பேசுவதை பார்த்தால் உண்மையிலேயே நீங்கள் எல்லாம் நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் தானா அக்கறை உள்ளவர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.இந்திய மக்கள் அனைவரும் பாரதிய ஜனதாவுக்கு பாரதிய ஜனதாவிற்கு ஓட்டளித்து வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் திரு நரேந்திர மோதி அவர்களை மீண்டும் பிரதமராக்கி நாட்டை வளப்படுத்துவோம் முன்னேற்றுவோம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
16-மார்-201900:00:43 IST Report Abuse
Mano இனி முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X