அரசியல் செய்தி

தமிழ்நாடு

சைகையில் விஜயகாந்த் நேர்காணல்: விருப்ப வேட்பாளர்கள் அதிர்ச்சி

Updated : மார் 13, 2019 | Added : மார் 13, 2019 | கருத்துகள் (31)
Advertisement
D.M.D.K,DMDK,Vijayakanth,தே.மு.தி.க,விஜயகாந்த்,சைகை,நேர்காணல்,விருப்ப வேட்பாளர்கள்,அதிர்ச்சி

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம், நேர்காணல் நடத்திய விஜயகாந்த், 'சைகை'யில் கேள்வி எழுப்பியதால், கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை, கோயம்பேட்டில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு அளித்த, 300க்கும் மேற்பட்டோர், நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களை, ஒரே இடத்தில் மொத்தமாக அமரவைத்து, விஜயகாந்த் நேர்காணல் நடத்தினார்.'தேர்தலில் நின்றால், எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என, ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் துாக்கி, சில்லரையை சுண்டுவது போல செய்கை காட்டி, விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு, விருப்பமனு அளித்தவர்கள் பதில் அளித்தனர். மற்றபடி, விஜயகாந்த், வாய் திறந்து எதுவும் பேசவில்லை.




சிலரை பார்த்து, விஜய காந்த் ஏதோ ஆர்வமுடன் பேச முயற்சித்தார். ஆனால், விஜயகாந்த் பேசியதை அவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. இதனால், நேர்காணலில் பங்கேற்றகட்சியினர், அதிர்ச்சி அடைந்தனர்.

விருப்பமனு கட்டணமாக, பொதுத்தொகுதிக்கு பெறப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய்; தனித்தொகுதிக்கு பெறப்பட்ட, 10 ஆயிரம் ரூபாய், தேர்தல் செலவிற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக, நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில், 60 நாட்கள் சிகிச்சை பெற்று, சில நாட்களுக்கு முன், சென்னை திரும்பினார்.




'விஜயகாந்த் உடல்நலம் தேறி வருகிறார்; தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார்' என, அவரது மனைவி, பிரேமலதா கூறி வருகிறார். ஆனால், நேற்று நடந்த நேர்காணலின் போது, விஜயகாந்தால் பேச முடியவில்லை; சைகை காட்டினார். இதை பார்க்கும்போது, விஜயகாந்த் பூரண உடல் நலம் தேறியதாக தெரியவில்லை. எனவே, தேர்தல் பிரசாரத்தில், அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
14-மார்-201911:14:08 IST Report Abuse
narayanan iyer இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லையே. அவரால் கடந்ததேர்தலுடன் பேசமுடிந்தவரை பேசிவிட்டார். அவர் பேச்சிற்கு மக்கள் மதிப்பளிக்கவில்லை . இப்போ கூட அவரைக்காட்டி பேரம்பேசி முடித்துவிட்டனர். எங்களால்தான் மற்ற கட்சிகள் என்றவர்கள் எதற்கு கூட்டணிவைக்கவேண்டும்? நாற்பதிலும் தனியே நின்று தனித்தன்மையை காட்டியிருக்கலாமே . எதிர்க்கட்சி தலைவராக்கிய அம்மாவையே தாறுமாறாக பேசிவிட்டு இப்போ என்னவேண்டிக்கிடக்கு கூட்டு?
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201911:08:05 IST Report Abuse
ஆப்பு யாரும் ரொம்ப கிட்டே போயிறாதீங்க. கேப்டன் ஓங்கி அடிச்சுறப் போறாரு.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மார்-201910:27:34 IST Report Abuse
D.Ambujavalli இவர் இமேஜைக் கெடுத்து மூலையில் உட்காரவைத்த ‘புண்ணியவான்’ மூன்றாம் அணிக்கனவு கலைந்து சேரிடம் சேர்ந்துவிட்டார். இவர்தான் ‘காகித ஓடம் கடலலை மேலே’ மிதக்கிறார். கேப்டனை ஓரம் கட்டிவிட்டுக் கப்பல் ஓட்ட முயற்சிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X