பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட
பாக்., பைலட் யார் என தெரியும்'

புதுடில்லி: ''விங் கமாண்டர், அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட, பாகிஸ்தானின், 'எப் - 16' விமானத்தின் பைலட் யார் என, நம் ராணுவத்துக்கு தெரியும்,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன் கூறினார்.

ராணுவ அமைச்சர்,நிர்மலா சீதாராமன்,அபிநந்தன்,இந்தியவிமானி,பாக்., பைலட்,


ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று கூறியதாவது: பாகிஸ்தான் விமானப் படையின், எப் - 16 ரக போர் விமானம், சமீபத்தில், நம் எல்லைக்குள்

அத்துமீறி நுழைந்தது. இந்த விமானத்தை, நம் விமானப் படையின், விங் கமாண்டர், அபிநந்தன், சுட்டு வீழ்த்தினார். அந்த விமானத்திலிருந்த பைலட், பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தார்; அவரை, பாகிஸ்தான் மக்களே தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அந்த பைலட் யார், அவரது பெயர் என்ன என, அனைத்து விபரமும், நம் ராணுவத்துக்கு தெரியும்.

இது தொடர்பான எந்த விஷயத்தையும், பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாது. கார்கில் போரில், தங்கள் வீரர்கள் இறந்ததையே மூடி மறைத்த பாகிஸ்தான், எப் - 16 விமானம் வீழ்த்தப்பட்டதையோ, பைலட் இறந்ததையோ, ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது. பாகிஸ்தான் பிடியில் சித்ரவதை அனுபவித்த, விங் கமாண்டர் அபிநந்தன், தற்போது நலமாக உள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதற்கிடையில், பாகிஸ்தானின் பாலகோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இறந்த பயங்கரவாதிகளின் உடல்களை, கைபர் பக்துன்குவா பகுதிக்கு, பாகிஸ்தான் ராணுவம் துாக்கிச் சென்றதாக, அமெரிக்காவை சேர்ந்த கில்கிட் என்பவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான, 'வீடியோ' ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், இறந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை, பாக், ராணுவ அதிகாரி சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும் பதிவாகிஉள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மார்-201911:15:47 IST Report Abuse

Malick Rajaநாடு விளங்கிடுச்சில்ல ..

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மார்-201918:28:39 IST Report Abuse

Malick Rajaபாதுகாப்பு அமைச்சராக இருப்பது அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளினாழும் வெளிவந்துகொண்டே இருக்கிறது .

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
14-மார்-201917:14:56 IST Report Abuse

RameshSeriously people in TN , Most, are self corrupted (Morally, Ethically, Data wise , Fact wise)....People in TN will believe parties Dravidian parties who only worked AGAINST the welfare of TN people throughout last 50 years and looted state as well as country...They believe people who are ACTING in the REEL ...It is of waste to explain as a person who does not know can be made understand and people who pretends as if does not know can't be made to understand...Foolish - Selfish - Lost Self respect - Convenient - Biased people ...Not all but most of the people....

Rate this:
Subra Maniam - London,யுனைடெட் கிங்டம்
15-மார்-201913:49:27 IST Report Abuse

Subra ManiamRamesh - Bangalore Just because TN people did not believe in the parties with leaders from other language speaking states you cannot say most of them are self corrupted (Moraly etc.). You have to be one among us and value our values and not pushing your values into us to get the support. This is an old culturlay rich society which values our culture. Also, you are stating as if no other party in India loot when they were in power, this is a joke. Your comments reflect your frustration of not able to get the support from TN people for that you need to be real and do things on the ground as people here value the action/ reality on the ground and not mere words. This means people here are smart, educated and know exactly how the political parties operate. ...

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X