பதிவு செய்த நாள் :
அதிரடி!
'திருடப்பட்ட ஆவணங்களை கருத்தில் கொள்ளக் கூடாது'
'ரபேல்' வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

'ரபேல்' போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பாதுகாப்புத் துறை செயலர், புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். 'திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது' என, அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிரடி,ரபேல்,ஆவணங்கள்,திருட்டு,மத்திய அரசு,வாதம்


ஐரோப்பிய நாடான, பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்தின், 'ரபேல்' ரக போர் விமானங்களை, விமானப் படைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 36 விமானங்கள் வாங்கப்பட உள்ளன. ஆனால், இந்த ஒப்பந்தத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்தாண்டு, டிச., 14ல் அளித்த தீர்ப்பில், 'ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை' என, கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர், சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

விபரங்கள்:



இதற்கிடையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, சமீபத்தில், ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்கள் அதில் இடம் பெற்றன. இந்நிலையில், பிரஷாந்த் பூஷண் சார்பில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், போர் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ராணுவ அமைச்சகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன; அந்த ஆவணங்களே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என, அவர் வாதிட்டார். அதற்கடுத்த விசாரணையின்போது, 'போர் விமானம் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை. அமைச்சகத்தில் உள்ள ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவும் திருட்டுக்கு ஒப்பானது தான்' என, அவர் கூறினார்.

புதிய மனு:



இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்புத் துறை செயலர், சஞ்சய் மித்ரா சார்பில், நேற்று ஒரு புதிய மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நம் விமானப் படையின் போர் விமானங்களின் வலிமை குறித்த, ராணுவ அமைச்சகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன; இது, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. இந்த வழக்கில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமானம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், ராணுவத் துறை செயலர் புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளது; பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:

உச்ச நீதிமன்றத்தில், பாதுகாப்புத் துறை செயலர், சஞ்சய் மித்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், மேலும் கூறியுள்ளதாவது: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை திருட்டுத் தனமாக நகல் எடுத்து, அதை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், திட்டமிட்டு, சதி செய்து, இந்த செய்தியை வெளியிட்டோர், அதை அவர்களுக்கு அளித்தோர், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. போர் விமானத்தின் முழு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்த ஆவணங்களை வெளியிட்டுள்ளனர். இது, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளுடனான நட்புறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 'இந்த போர் விமான ஒப்பந்தத்தில், போர் விமானம் குறித்த தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்' என, உறுதி அளித்துள்ளோம்; அதை, மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தற்போது, இந்த ஆவணங்கள் வெளியாவது, இந்த ஒப்பந்தத்துக்கு எதிரானது. ராணுவ அமைச்சகத்தில் இருந்து, இந்த ஆவணங் கள் எப்படி நகல் எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும், வழக்கின் முக்கிய நோக்கம், இந்த போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளதா என்பது குறித்து தான். ஆனால், தற்போது, போர் விமானத்தின் தொழில்நுட்ப விபரங்களைத் திருடி, நகல் எடுத்துள்ளனர். அதனால், இந்த ஆவணங்களின் அடிப்படையில், நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201920:56:11 IST Report Abuse

ஆப்புஊழல் சொத்தைக் கொள்ளையடித்தால் தப்பா? திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்கோ என்னவோ?

Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14-மார்-201920:12:28 IST Report Abuse

Muruganபோபர்ஸ் ஊழல் என்ன ஆயிற்று ? அப்படித்தானே இதுவும். எல்லாம் ஒரு கண் துடைப்பு.

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
14-மார்-201917:15:26 IST Report Abuse

sankarசாந்தி பூஷன் . மாய் லாது நாங்க நகல்தான் எடுத்தோம் மேலும் வாயில்தான் ராணுவ ரகசியங்களை வெளியில் பேசினோம் அதனால் இது திருட்டு என்றார் வராது . சிதம்பரம் மற்றும்நஷொனால்ஹெரால்ட் வலைகள் குடும்ப பெயில் வழங்கியதற்கு நன்றி

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X