அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'சீட்' பெற போட்டா போட்டி!
தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரசில், 'பைட்!'
மத்திய அமைச்சர்கள் சிபாரிசு நாடும் கட்சியினர்

ஜெயலலிதா இருந்தவரை, தேர்தலில் போட்டி யிடுவதற்கான, 'சீட்' பெற, சசிகலா குடும்பத்தினரை சுற்றி வந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள், தற்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களையும், அவர்களின் உறவினர்களையும், 'காக்கா' பிடித்து வருகின்றனர். சிலர், அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான, மத்திய, பா.ஜ., அமைச்சர்களை பிடித்தும், 'சீட்' பெற, முயற்சித்து வருகின்றனர்.

A.D.M.K,ADMK,D.M.K,DMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


லோக்சபா தேர்தலுக்காக, தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பல கட்சிகளை இணைத்து, 'மெகா கூட்டணி' அமைத்துள்ளது. அதேபோல, எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், காங்கிரஸ் உட்பட, பல கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணி அமைத்து உள்ளது. அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த, 'சீட்'கள் போக, தலா, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க., 2014 லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது, 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால், தற்போதைய, எம்.பி.,க்களில், பெரும்பாலானவர்களுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை. அதனால், அ.தி.மு.க., களம் இறங்க உள்ள, 20 தொகுதிகளிலும், 'சீட்' பெற, கடும் போட்டி நிலவுகிறது. யாரை பிடித்தால்,

'சீட்' வாங்க முடியும் என, கட்சியினர் அலைபாய்கின்றனர். இதற்கு முன், 'சீட்' பெற, சசிகலா குடும்பத்தினரிடம் சிபாரிசுக்கு செல்வர்.

தற்போது, நிலைமை மாறி உள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரையும் பிடித்து, 'சீட்' பெற முயல்கின்றனர். மாவட்ட அமைச்சர்கள், தாங்கள் கூறும் நபருக்கு தான், 'சீட்' வழங்க வேண்டும் என, கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருவதால், அவர்களையும் சிலர், மொய்த்து வருகின்றனர்.

வேறு சிலரோ, அ.தி.மு.க., தலைமையுடன் நல்லுறவில் உள்ள, மத்திய அமைச்சர்கள், அருண்ஜெட்லி, பியுஷ் கோயல் ஆகியோர் சிபாரிசில், 'சீட்' பெற, காய் நகர்த்தி வருகின்றனர். ஏற்கனவே, பா.ஜ., பிடியில் தான், அ.தி.மு.க., தலைமை உள்ளது என்ற பேச்சு அடிபடுகிறது. அதற்கு வலுவூட்டும் வகையில், இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சென்னையில், அ.தி.மு.க., அலுவலகத்தில், நேர்காணலில் பங்கேற்றோர், 'சீட்' வழங்கினால், தாராளமாக பணம் செலவழிப்பதாக தெரிவித்து உள்ளனர். ராமநாதபுரம் தொகுதி நேர்காணலுக்கு வந்த, நடிகர் பஷீர், 10 கோடி ரூபாய்க்கான, வங்கி வரைவோலையுடன் வந்துள்ளார். '50 கோடி ரூபாய் வரை செலவழிக்க தயார்' என, தெரிவித்து, கட்சி தலைமையை மிரள வைத்துள்ளார்.

தி.மு.க.,விலும், 'லபோதிபோ':தி.மு.க.,வில், துாத்துக்குடியில், கனிமொழி; நீலகிரியில், ராஜா; மத்திய சென்னையில்,

Advertisement

தயாநிதி மாறன்; வேலுாரில், கதிர் ஆனந்த்; ஸ்ரீபெரும்புதுாரில், டி.ஆர்.பாலு என, பல தொகுதிகளுக்கு, வேட்பாளர்கள் உறுதியாகி விட்டனர். இதனால், அந்த தொகுதிகளுக்கு, 'சீட்' கேட்டு விண்ணப்பித்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். மற்ற தொகுதிகளில், 'சீட்' கேட்டவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட செயலர்களை பிடித்து, கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். வட சென்னை மற்றும் தென் சென்னையில், பணபலம் படைத்த, கட்சியினரிடம் நன்கு அறிமுகமான, புதுமுக வேட்பாளர்களை நிறுத்த, தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளதால், அந்த தொகுதிகளுக்கு, கடும் போட்டி நிலவுகிறது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் அதிகம் உள்ள கட்சி என்பதால், 'சீட்' பெற, அவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. டில்லி தலைவர்கள் வழியாக, 'சீட்' பெற, முட்டி மோதுகின்றனர். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. யாருக்கு எந்த தொகுதி என்பது முடிவாகி விட்டதால், அங்கு போட்டி இல்லை. மற்ற கட்சிகளில், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே, 'சீட்' என்பதால், போட்டி குறைவாகவே உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-மார்-201910:38:32 IST Report Abuse

நக்கீரன்இப்படி தேர்தலில் போட்டியிட .. மாதிரி அலைவதற்கு காரணம் ஜெயித்த பின் மக்களுக்கு சேவை செய்யவா? இல்லை. மக்களையும் இயற்கை வளங்களையும் சுரண்டி கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத்தான். இதை பலமுறை கடந்த தேர்தல்களின் மூலம் இந்த திருடர்கள் உணர்த்தியிருக்கிறார். ஆனாலும், மக்கள் திருந்தவில்லை. ஆனால், காலம் கடந்துவிட்டது. இனியும் இவர்களையே தேர்ந்தெடுத்தால் நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததிக்கே ஆப்புதான். இதை புரிந்துகொள்ளவில்லையென்றால் இனி சாப்பிடுவதற்க்கே இவர்களிடம் கையேந்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். எனவே, இனி மக்களின் நலன் நாடும் நல்லவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம். அந்த நல்லவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.

Rate this:
Ganesh G - Hyderabad,இந்தியா
14-மார்-201914:37:31 IST Report Abuse

Ganesh Gஒரு முறை ஜெயித்து விட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் வருமே ...

Rate this:
sripa - muscat,ஓமன்
14-மார்-201910:14:01 IST Report Abuse

sripaஎல்லா அரசியல் கட்சிக்குள் வாரிசு அரசியல் உள்ளது. தானும், தனுக்குப்பின் தனது மகன் பேரன் என்று நெடுகொண்டீ போகிறது. இதில் அடிமட்டத்தொண்டனுக்கு வெறும் எச்சிலை தான் மிச்சம்.

Rate this:
karutthu - nainital,இந்தியா
14-மார்-201917:55:50 IST Report Abuse

karutthuஅப்படி தெந்தும் வெட்கமில்லாமல் தொண்டர்கள் இவர்களுக்கு சாதகமாகவே வேலை செய்கின்றனர் அப்புறம் நாடு எப்படி உருப்படும் .இவர்கள் கொடுக்கிற ஓட்டுக்கு 1000, 2000,5000 என வாங்கிக்கொண்டு தண்ணி அடித்து மப்புல படுத்து கிடக்கிறான் அப்புறம் எவன் சுயநலமில்லாமல் உழைப்பான் . அதெல்லாம் காமராஜர் , ஆர் வீ காலத்துடன் முடிந்து விட்டது ஆகையால் நோட்டா விற்கு வோட்டு போடுவதே நல்லது ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201908:51:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaகேக்காமலேயே வரும் மாமுல், செலவே இல்லாமல் வரும், கார் , பங்களா, எங்கே போனாலும் மரியாதை...,,, வீடுதேடி வரும் பரிசுகள், பணம், பதவி போன பிறகும் வரும் மாத ஓய்வொதியம்..இலவச விமான பயணம்.. எல்லாவற்றிலும் ஒதுக்கீடுகள் ,ஓசி சாப்பாடு எல்லாம் வருமே ..விடுவார்களா

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X