ஓட்டளிப்பதை ஊக்கப்படுத்துங்கள்; பிரபலங்களுக்கு பிரதமர் கோரிக்கை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஓட்டளிப்பதை ஊக்கப்படுத்துங்கள்
பிரபலங்களுக்கு பிரதமர் கோரிக்கை

புதுடில்லி: ''தேர்தலில் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை, மக்கள் உணரும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துங்கள்,'' என, பல்வேறு துறை பிரபலங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓட்டளிப்பதை,ஊக்கப்படுத்துங்கள்,பிரபலங்களுக்கு,பிரதமர், கோரிக்கை


லோக்சபா தேர்தல், ஏப்., 11ல் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவை அதிகரிக்கச் செய்வதற்காக, சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: தேர்தலில் ஓட்டளிப்பது, நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்கெடுக்கும் செயல். எனவே, ஓட்டளிக்கும் அவசியம் குறித்து, மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டியது, பிரபலங்களின் கடமை. வாக்காளர்கள் ஓட்டளிப்பதை, பிரபலங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்., தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்

Advertisement

உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், இது தொடர்பாக, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களுக்கும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (13+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-மார்-201922:22:53 IST Report Abuse

Pugazh Vமதுரை மற்றும் அதன் அருகில் உள்ள நகர கிராம மக்கள் ஓட்டு போடாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு.

Rate this:
14-மார்-201920:19:28 IST Report Abuse

ஆப்புமுதல்ல ரிடையர் ஆனவங்களுக்கு பதவி நீட்டிப்பு குடுத்து , அவிங்க தேர்தல் தேதிகளை சொதப்புறதை நிறுத்துங்க ஐயா...60 வயசுக்கப்புறம் மூளை வேலை செய்யாமல் பணியாற்ற அது ஒண்ணும் அமைச்சர் பதவியோ, கெவுனர் பதவியோ அல்ல.

Rate this:
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
14-மார்-201914:33:50 IST Report Abuse

Sheriஎன்னது... அண்ணன் same சைடு கோல் போடுறாரு... அதிகம் பேர் ஓட்டு போட்டால் இவர் கட்சி therumaa... வாழ்க வளமுடன்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-மார்-201922:36:49 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்எல்லாம் வேஷம் தான்.. ஓட்டு போட சொல்லுங்கன்னு ஒரு கும்பலுக்கு இந்தப்பக்கம் சொல்லிட்டு, இன்னொரு பக்கம் தீராத ஆணையத்தில் நிர்வாகத்தில் இருக்குறவங்களை கூப்பிட்டு அது நடக்காமே பாத்துக்குறது....

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X