பயங்கரவாதத்தை ஒடுக்குங்கள்; பாக்.,கிற்கு கடும் கண்டனம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பயங்கரவாதத்தை ஒடுக்குங்கள்
பாக்.,கிற்கு கடும் கண்டனம்

புதுடில்லி: 'பயங்கரவாதத்துக்கு எதிராக, பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.

 பயங்கரவாதம்,ஒடுக்குங்கள்,பாக்.,கடும் கண்டனம்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், சமீபத்தில், பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு,

அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள, வெளியுறவு செயலர் வினய் கோகலே, அந்நாட்டின், அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவு செயலர், டேவிட் ஹாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, புல்வாமா தாக்குதல், எல்லை தாண்டும் பயங்கரவாதம் உட்பட, பல பிரச்னைகள் பற்றி, இருவரும் விவாதித்தனர்.

சந்திப்புக்கு பின், அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: உலக அமைதிக்கே சவால் விடுத்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக, பாகிஸ்தான் உறுதியான, கடுமையான நடவடிக்களை உடன் எடுக்க வேண்டும். எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை,

Advertisement

பாகிஸ்தான், ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது என, இந்தியா - அமெரிக்கா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை, மேலும் மேம்படுத்த, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
16-மார்-201907:06:06 IST Report Abuse

Manianமுஸ்லீம் மக்கள் ஜனத்தொகை அதிகமாக இருக்கும் வரை, மத்திய தரை கடல் எண்ணெய் வளம் இருக்கும் வரை, பாகிஸ்தானை யாரும் அழிக்க முடியாது. மத இன பிணைப்பு அவர்களிடம் மிகவும் அதிகம். தங்கள் மக்களை-பெண்களயும் கொல்லும் பாவிகள் பாக்கிஸ்தானை எப்படி அடக்குவார்கள்?

Rate this:
tamil - coonoor,இந்தியா
14-மார்-201908:48:42 IST Report Abuse

tamilதீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு விரும்பினாலும் அது நடக்க வாய்ப்பில்லை,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201908:37:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaமக்கள் சரியாக இருந்தால் பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுவிடும்

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X