ரூ.9 கோடிக்கு விற்கப்பட்ட தொகுதி!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.9 கோடிக்கு விற்கப்பட்ட தொகுதி!

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 ரூ.9 கோடிக்கு விற்கப்பட்ட தொகுதி!

பீஹாரில், ஆளும், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றிருந்து, 'சீட்' பேரம் படியாததால், முன்னாள் மத்திய அமைச்சர், உபேந்திர குஷ்வாகாவின், ஆர்.எல்.எஸ்.பி., எனப்படும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி விலகியது.
காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இடம் பெறுவதற்கான முயற்சிகளில்குஷ்வாகா ஈடுபட்டுள்ளார்.இந்த நிலையில், குஷ்வாகா மீது, அக்கட்சியின் முன்னாள் தேசிய செயல் தலைவரான, நாகமணி, சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
“பீஹாரின் மோதிஹாரி தொகுதியில், கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்க, மாதவ் ஆனந்திடம் இருந்து, 9 கோடி ரூபாயை குஷ்வாகா வாங்கியுள்ளார். அதே தொகுதி யில் போட்டியிட விருப்பம்தெரிவித்துள்ள பிரதீப் மிஸ்ராவிடமும், சீட் உங்களுக்குத்தான் என்று கூறி, பணம் பறித்து வருகிறார்,” என, நாகமணிகூறியுள்ளார்.
மாதவ் ஆனந்த் மற்றும் பிரதீப் மிஸ்ரா, கட்சியின் தேசிய பொதுச் செயலர்களாக இருந்தனர். இதில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக, பதவியில் இருந்து பிரதீப் மிஸ்ரா சமீபத்தில் நீக்கப் பட்டார்.“கட்சிக்காக, 15 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளேன். இதைத் தவிர குஷ்வாகாவின் தனிப்பட்ட சில செலவு களையும் கவனித்துள்ளேன்.
தற்போது மோதிஹாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வேண்டுமானால், பணம் கொடுக்க வேண்டும் என்று குஷ்வாகா கூறுகிறார்,” என,பிரதீப் மிஸ்ராவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்றும், இருவரும் கூறியுள்ளனர்.
குட்டிக் கட்சியிலேயே, ஒரு தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்த, 9 கோடி ரூபாய் பணம் கேட்கப் படும் நிலையில், மற்ற கட்சிகளில், எவ்வளவு, பணம் விளையாடும் என, பீஹார் மக்கள் கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்த்து மிரண்டுள்ளனர்.பீஹாரில் உள்ள, 40 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.



வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மார்-201912:07:23 IST Report Abuse
Malick Raja 😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-மார்-201921:40:58 IST Report Abuse
Bhaskaran நம்மவூரிலும் பொள்ளாச்சித்தொகுதியை திமுக நல்ல விலைக்கு விற்றிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-மார்-201921:01:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கருப்புப்பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இது லஞ்சம் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X