மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானதாக அறிவியுங்க'

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement


'மேற்கு வங்கத்தை மிகவும்
பதற்றமானதாக அறிவியுங்க'

புதுடில்லி:'மேற்கு வங்கத்தில், நியாயமான முறையில் லோக்சபா தேர்தல் நடக்கும் வகையில், அந்த மாநிலத்தை, மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்திடம், பா.ஜ., கட்சி வலியுறுத்திஉள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், இந்த மாநிலத்தில், பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.ஆனால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, பா.ஜ., நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். இதனால், இரு கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.இந்நிலையில், டில்லியில் நேற்று, மத்திய அமைச்சர்களும், பா.ஜ., பிரமுகர்களுமான, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் பொதுச் செயலர், புபேந்தர் யாதவ் உள்ளிட்டோர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர்.


latest tamil news



அப்போது, 'மேற்கு வங்கத்தில், நேர்மையான முறையில் தேர்தல் நடக்க வேண்டுமானால், அந்த மாநிலத்தை, பதற்றமான மாநிலமாக அறிவிக்க, வேண்டும்' என, அவர்கள் கோரிக்கை வைத்தனர்.மேலும், குஜராத் மாநிலம், ஆமதாபாதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட, காங்., தலைவர், ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவர்கள் வலியுறுத்தினர்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
danush - chennai,இந்தியா
14-மார்-201915:15:08 IST Report Abuse
danush ஏன் பாஸ் ... வோட்டிங் மெஷின் மாத்த முடியிலயா?
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
14-மார்-201910:19:26 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை அப்படியே அந்த பற்றியல்ல உத்திரப்பிரதேசத்தையும் மஹாராஷ்ட்ராவையும் சேர்த்துக்கோங்க.
Rate this:
Cancel
Being Justice - chennai ,இந்தியா
14-மார்-201910:13:18 IST Report Abuse
Being Justice எல்லா ஸ்டேட்லேயும் நாங்க தான் அடிப்போம். ஆனா இங்க எங்களை அடிக்கிறாங்க. அதனால பதட்டமானதா அறிவிப்பு செய்யுங்கள். ரொம்ப அடிக்கிறாங்க வலிக்குது. அழுதுட்டிருக்கோம். ப்ளீஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X