அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உளவுத்துறை சொன்ன உற்சாக செய்தி!

கூட்டணியை முடிவு செய்வதற்கு, தே.மு.தி.க., காலம் தாழ்த்தியது. முந்தைய தேர்தல்களில், இதுபோன்று காலம் தாழ்த்தியதால், அக்கட்சியின், ஓட்டு வங்கி கணிசமாக சரிந்தது.

உளவுத்துறை,உற்சாக செய்தி!


தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டாய வெற்றியை எதிர்நோக்கி, தே.மு.தி.க., உள்ளது.கூட்டணி காலதாமதம், இம்முறையும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சாதகமாகும்:



இது, தே.மு.தி.க., தலைமையை சோகத்தில் ஆழ்த்தியது. கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில், சுதீஷ் போட்டியிட்டால், வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது. இங்குள்ள, மூன்று சட்டசபை தொகுதிகள், முதல்வரின் சொந்த மாவட்டமான, சேலத்தில் வருகின்றன.

சேலத்தில், பல்வேறு திட்டங்களை, முதல்வர் செயல்படுத்தியுள்ளதால், சுதீஷுக்கு சாதகமாக, இது அமையும் என, உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதேபோல, கிருஷ்ணகிரி தொகுதியில், தே.மு.தி.க., மாவட்ட செயலர் அன்பரசன் களமிறக்கப்பட உள்ளார். இவர் ஏற்கனவே, 2009ல், தனித்து போட்டியிட்டு, அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரையின் உறவினர். இதனால், அ.தி.மு.க.,வினர், தீயாக வேலை செய்வர் என்பதால், அவருக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

திருச்சியில், மாநில மாணவர் அணியை சேர்ந்த, விஜயகுமார் போட்டியிடவுள்ளார். இவரும், முந்தைய தேர்தலில், அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார்; தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளது. அ.தி.மு.க., ஆதரவு கைகொடுக்கும் போது, இவரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வடசென்னை அல்லது திருவள்ளூர் தனி தொகுதியை, அ.தி.மு.க., தர உள்ளது. இதில், திருவள்ளூர் தனித்தொகுதியில் போட்டியிடுவதையே, தே.மு.தி.க., விரும்புகிறது.

Advertisement

பஞ்சர் கடை:



இத்தொகுதியில், தே.மு.தி.க., மாநில இளைஞரணி செயலரும், முன்னாள், எம்.எல்.ஏ.,வுமான, நல்லதம்பியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர், சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருவது, மக்கள் மத்தியில் பேசப்படும் விஷயமாக அமையும் என, தே.மு.தி.க., தலைமை கருதுகிறது.

இவர்கள் நால்வரும் போட்டியிடும் பட்சத்தில், தே.மு.தி.க., வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக, அரசுக்கு, உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. சோகத்தில் இருந்த, தே.மு.தி.க., தலைமையை, இந்த தகவல், உற்சாகமடைய செய்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
19-மார்-201912:57:52 IST Report Abuse

karutthuதிருச்சியில் தினகரன் கட்சியை சேர்ந்த சாரூ பாலாதொண்டைமான் இருப்பதால் வலுவான வேட்பாளர் களம் இறக்காமல் விட்டால் தினகரனுக்கு ஒரு எம் பீ உறுதியாகிவிடும்

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
18-மார்-201919:41:19 IST Report Abuse

Ramachandran  Madambakkamதிருச்சியில் குஷ்பு போட்டியிடுவதாக இருந்தால் விஜயகுமாரின் வெற்றி உறுதி.

Rate this:
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
22-மார்-201907:15:46 IST Report Abuse

Mannai Radha Krishnanதிருச்சியில் குஷ்புவுக்கு (ஏர்போர்ட் போகும் வழியில்) ஒரு கோயில் இருக்கிறது. ஆகையால் குஷ்பூ திருச்சியில் வெற்றி உறுதி. ஹா...ஹா... ...

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201903:56:59 IST Report Abuse

J.V. Iyerகுடும்ப முன்னேற்ற கழக கூட்டத்தில் கூடாரங்களை விட எல்லோரும் நல்லவர்களே தமிழ் நாட்டு குடும்ப முன்னேற்ற கழகம், தேசிய குடும்ப முன்னேற்ற கட்சியினால் நாட்டிற்கு கெடுதல்கள் வந்தது. இனியும் வராமல் தடுக்கவேண்டும்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X