அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வடக்கே படேல், தெற்கே காமராஜர்
பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் பிரதமர்:
ஸ்டாலின் தாக்கு

நாகர்கோவில்: ''தேர்தல் வந்ததும் வடக்கே படேல், தெற்கே காமராஜர் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் பரிதாபமான நிலையில் பிரதமர் மோடி உள்ளார்,'' என நாகர்கோவிலில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

பிரதமர்,ஸ்டாலின்,தாக்குஅவர் பேசியதாவது: கருணாநிதியின் மகனாக அடுத்த பிரதமர் ராகுல் என்று நான் உறுதியோடு சொன்னேன். 1980-ல் நேருவின் மகளே வருக, ஒளிமயமான இந்தியாவை தருக, 2004-ல் இந்தியாவின் மருமகளே வருக என்று சொன்ன ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் மகனாக, ராகுலை ஒளிமயமான இந்தியாவை தருக என்று அழைக்கிறேன். இவ்வாறு கூறும் போது இந்தியா இருள் மயமாக இருக்கிறது என்பது தெரிகிறது.


ராகுல் தலைமையில் இந்தியா வந்தால் தேசம் வளர்ச்சி பெறும். ஆரோக்கியமாக இருக்கும். நாடும் அதைதான் எதிர்பார்க்கிறது. மோடி புதுபுது உடைகளை உடுத்தி விதம் விதமாக தொப்பி வைத்து நாடுநாடாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார். மோடிதான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாரே தவிர இந்தியா ஒளிமயமாக மாறவில்லை. வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார். ஆனால் நாடு தளர்ச்சி, தளர்ச்சி என்று சென்று கொண்டிருக்கிறது.


நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் குறைந்துள்ளது. மோடி வந்தால் திட்டம் வரும், நிறுவனம் வரும், வேலை கிடைக்கும் என்று வாக்களித்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிரதமர் ஆவதற்கு முன்னால் அவர் தொடர்ந்து சொன்னது, கறுப்பு பணம்,ஒழிப்பது தான் எனது முதல் வேலை என்று. 90 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதாக சொன்னார்.

15 ஆயிரம் அல்ல 15 ரூபாயாவது டெபாசிட் செய்தாரா? கறுப்பு பணம் எந்த நாட்டில் எந்த வங்கியில் இருக்கிறது என்று சொன்னாரா?


கண்கட்டி வித்தைக்காரர்களை போல கறுப்பு பணம் இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டினோரே தவிர காட்டவில்லை. கறுப்பு பணத்தை கேட்ட போது நாட்டில் உள்ள நல்ல பணத்தை ஒழித்தார்கள்.திருடனை கண்டுபிடிக்க ஊரில் உள்ள அனைவரையும் கைது செய்து அதில் இருந்து திருடனை கண்டுபிடித்த துக்ளக் தர்பார்ரை போல நாட்டில் மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்றார். ரபேல் ஒன்று போதாதா?


அடிக்கல் நாட்டு விழா:
மோடிக்கு இப்போதுதான் இந்தியாவின் நினைப்பு வந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி அடிக்கல் நாட்டுவிழா நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுக்குள் அடிக்கல் நாட்ட வேண்டும். அடுத்த ஆண்டுகளில் திறப்பு விழா நடத்தினால் நிர்வாக திறமை இருக்கும். கடந்த சில நாட்களாக மோடியின் பயணத்திட்டத்தை பார்த்தால் 30 நாட்களில் 155 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். அவரது வேலை அடிக்கல் நாட்டுவது மட்டும்தான்.


இப்போது மோடிக்கு காமராஜர் மீது பாசம் வந்து கொண்டிருக்கிறது. 1966 பசுவதை தடை சட்டம்கொண்டு வரக்கோரி டில்லியில் பேரணி நடைபெற்றது. இதில் வன்முறையை துாண்டி விட்டவர்கள் காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தனர். அவர்களுக்கு காமராஜர் பெயரை சொல்ல என்ன யோக்யதை இருக்கிறது. காமாஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டுவந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி தந்தவர் கருணாநிதி. இப்படி ஏதாவது மோடி செய்தது உண்டா.தேர்தல் வந்ததும் வடக்கே படேல், தெற்கே காமராஜர் பெயரை சொல்லி ஓட்டு கேட்க நினைக்கிறார்கள்.


மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஓட்டு கேட்க உங்கள் கட்சியில் பெயர் இல்லையா? தமிழ்நாட்டில் மோடியின் பினாமி ஆட்சியாக பழனிசாமி ஆட்சி நடக்கிறது. தலைமை செயலகத்தில் சோதனை நடைபெறுகிறது, அமைச்சரை கவர்னர் மிரட்டுகிறார். முதல்வரை பிரதமர் மிரட்டுகிறார். தமிழ்நாட்டில் கொத்தடிமை ஆட்சி நடைபெறுகிறது.


Advertisement

பொள்ளாச்சியில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமை படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதை பார்க்கும் போது இந்த ஆட்சி ஊழல் ஆட்சி மட்டுமல்ல, லஞ்ச லாவண்ய ஆட்சி அல்ல, கொள்ளைகார ஆட்சி மட்டுமல்ல, கொலை கார ஆட்சி மட்டுமல்ல, பாலியல் கொடுமைப்படுத்தப்படும் அநியாய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.


இந்தியாவின் ஆட்சி சக்கரம் இன்னும் சில நாட்களில் உங்கள் கையில் வரும். அந்த ஆட்சி ஏழைகளுக்காக சாமானியர்களுக்கான ஆட்சியாக அமைய வேண்டும். உங்களை ஆதரிக்க காரணம் நீங்கள் மோடி அல்ல, ராகுல்.ம.தி.மு.க., பொது செயலர் வைகோ: அவர் பேசியதாவது: நானே அரசு, நானே நாடு என பிரதமர் மோடி பாசிச ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இந்திய அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக காங்., தலைவர் ராகுல் திகழ்கிறார். நாட்டை நாசப்படுத்தும் மதவாத பாசி ஆட்சி நடத்தும் மோடியை தோற்கடிக்க வேண்டும். இந்துமக்கள் சேனா படையினர் காந்தி படத்தை சுட்டு ரத்தம் வடிய செய்யும் நிலை இன்றுள்ளது. அதனால்தான் ராகுல், 'இது காந்தி நாடா; கோட்சே நாடா,'என கேட்கிறார்.


அவரது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியவில்லை என்றார்.காங்., மாநில தலைவர் அழகிரி: “நாட்டில் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமா, எல்லா மக்களுக்கும் ஒன்றுபட்டு வாழ வேண்டுமா, மதசார்பற்ற அரசு வேண்டுமா, அதற்கு ராகுல் பிரதமராக, தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். ஆனால் மோடி ஒரேநாடு ஒரே மதம் என்ற கொள்கையை திணிக்க முயற்சிக்கிறார். ரபேல் விவகாரத்தில் ராகுல் கேள்விகளுக்கு பிரதமரால் பதிலளிக்க முடியவில்லை,” என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-மார்-201915:18:58 IST Report Abuse

meenakshisundaramஅங்கங்கே யாரு பெயரை சொன்னாத்தானேய்யா அங்குள்ள மக்களுக்கு தெரியும்,நீ டெல்லிலே போயி 'அண்ணாத்துரைன்னு 'சொல்லிப்பாரு ,ஏன்?ஆந்திராவிலே போயி சொல்லேன் ?ஏமண்டி இவுரு? அப்படீயென்பான் .

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
17-மார்-201910:23:43 IST Report Abuse

S.Ganesanவடக்கு மக்களுக்கு தெரிந்தவர், அவர்களுக்காக பாடுபட்டவர் படேல். அதே போல் தெற்கே காமராஜர். இவர்கள் பேரை சொல்லாமல் ஊழல் செய்வதையே தனது குறிக்கோளாக கொண்ட இவனுங்க பெயரையா சொல்லி வோட்டு கேட்க முடியும் ? பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் இந்த பேச்சு.

Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
16-மார்-201919:47:42 IST Report Abuse

madhavan rajanநீங்கள் ராகுல்தான் பிரதமர் என்று எல்லா இடத்திலும் ஏன் கூறவில்லை. மேற்கு வங்கத்தில் நீங்கள் அதை கூறுவதை யார் தடுத்தது. உங்களுக்கு மட்டும்தான் ராஜதந்திரம் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் அது யார் தவறு.

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X