எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரேக்கிங் நியூஸ்!
'பிரேக்கிங் நியூஸ்' மாநிலமாக
மாறிய தமிழகம்!

தலைமுறைகள் மாறும் போது, சமூகத்தின் மீதான கருத்துக்களும், பார்வைகளும் மாறுகின்றன. முன்னாள் பிரதமர் நேருவுக்கு, நாட்டின் மீதான பார்வை, பரந்து விரிந்து இருந்தது. அவர் சிறையில் இருந்த போது, தன் மகள் இந்திராவுக்கு கடிதம் எழுதினார்.

பிரேக்கிங் நியூஸ்,தமிழகம்


அதில், 'நாடு என்பது வடக்கில் உள்ள மனிதர்களும், மாநிலங்களும் மட்டுமல்ல; அதைத் தாண்டி, பல மொழிகள், கலாசாரம் சார்ந்தது. அதை உணர்ந்து, அனைவருடனும் நட்புடன் பழக வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு, மரியாதை அளிக்க வேண்டும். இதை, காந்தியின் சகிப்பு தன்மையும் கூறுகிறது' என, தெரிவித்திருந்தார்.

நேருவுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த இந்திரா, துணிச்சலான பெண்மணியாக இருந்தாலும், தன் தந்தையை போல, பரந்த மனதுடன் இல்லை என்ற விமர்சனம் இருந்தது. இந்திராவின் மகன், ராஜிவின் பார்வையில், அந்த கொள்கைகள் இருந்ததாக தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., ஆட்சி மீது அதிருப்தி அடைந்தால், அ.தி.மு.க.,விற்கு ஓட்டு; அ.தி.மு.க., மீது அதிருப்தி அடைந்தால், தி.மு.க.,விற்கு ஓட்டு என்ற நிலையே தொடர்கிறது.

எம்.ஜி.ஆர்., சினிமா நடிகராக, நல்லவராக மக்கள் மனதில் பதிந்ததால், அவர் பற்றிய பிம்பத்தை, மக்கள் அப்படியே நம்பினர். அதனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த, காங்கிரஸ் கட்சியும் எளிதில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில், அவர் பற்றிய

அதீத கற்பனைகள் பரப்பப்பட்ட போதும், அதை மக்கள் அப்படியே நம்பினர். கருணாநிதியை பற்றிய விமர்சனங்களும், அப்படித்தான் நம்பப்பட்டன.

தன்னை நம்பும், மக்களின் மனநிலையை அறிந்த, எம்.ஜி.ஆர்., அவர்களின் நம்பிக்கைக்கேற்ப நடந்து கொண்டார். அது, அவருக்கு தொடர் வெற்றியை தந்தது. தமிழக மக்களுக்கு, காங்., மீது, எப்போதும் வெறுப்பு வந்தது இல்லை. தமிழகம், காங்., பாரம்பரிய குடும்பங்கள் இடம் பெற்ற மாநிலமாக தான் இருந்தது. என்றாலும், இலங்கையில் போர் நடந்த போது, தமிழர்களை அழித்ததில், மத்தியில் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் அரசுக்கு பங்கு இருந்ததாகவே நம்பப்பட்டது.

தமிழர்களுக்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத நேரத்தில், அந்த கட்சி யுடன் கூட்டணியில் இருந்த, தி.மு.க., பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. இது, தமிழர்களுக்கு, கருணாநிதி மீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. அந்த சூழல் தான், மீண்டும், அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தியது. தற்போது, அ.தி.மு.க., ஆட்சி, ஜெயலலிதா என்ற ஆளுமையின் கீழ் இல்லாமல் போனதால், தமிழகம், 'பிரேக்கிங் நியூஸ்' மாநிலமாக மாறியுள்ளது. தங்களையும், கட்சியையும் காப்பதற்காக, அதன் நிர்வாகிகள் அடித்த லுாட்டியை, நாடே கை கொட்டி சிரித்தது. தமிழக மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

வட மாநிலங்களில், பெரும் போராட்டங்கள் நடந்த போதும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பின், தமிழகத்தில், பெரிய போராட்டங்கள் நடந்ததில்லை. ஆனால், 'ஜல்லிக்கட்டு' என்ற, பாரம்பரிய விளையாட்டுக்காக, தமிழக மக்களே திரண்டு போராடினர். அதை, மக்களின் அரசியல் முதிர்ச்சி என்றோ, ஒற்றுமை என்றோ பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. அது, அரசின் மீதான அவநம்பிக்கை. ஏதோ மாற்றம் வராதா என்ற ஏக்கம். இன்னும், தமிழகத்தை ஆளும் கட்சிக்கு, நல்ல தலைமை பஞ்சம் உள்ளது துரதிஷ்டம்.

Advertisement

தமிழகத்தை பொறுத்த வரை, கட்சிக்காரர்களை அரவணைப்பதிலும், அவர்கள் தவறு செய்தால் துாக்கி வீசுவதிலும், ஜெ.,வின் ஆளுமை திறன் அசாத்தியமானது. அவர் இருந்த போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்திருந்தால், அவரின் அணுகுமுறை கடுமையாக இருந்திருக்கும். விசாரணையில், அரசியல் தலையீடு இருந்திருக்காது. தமிழகத்தில், ஆணவ கொலைகளும், ஜாதி கலவரங்களும் அதிகரிப்பது கவலையளிக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 20 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' தந்து, ஓட்டு வாங்கியது போல, இந்த தேர்தலிலும், யாரும் ஓட்டை விற்பனை செய்யக் கூடாது என்பதே, என் ஆசை. அதேநேரம், இந்த சிறு பணம் வறுமைக்கு உதவுகிறதே; பணம் கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்யலாமா என்ற, நேர்மையும், இளகிய மனமும் உடைய ஏழைகள் இருக்கத் தான் செய்கின்றனர்.

இது தான், அரசியல்வாதிகளுக்கு பலமாகிறது. அவர்களின் கடமையில் இருந்து, தவறு செய்ய துாண்டுகிறது. இதிலிருந்து விடுபட, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்.டி.ஆரையே, தோற்கடித்த ஆந்திர மக்களின் மன வலிமையும், நடுநிலை பார்வையும் தமிழக வாக்காளர்களுக்கும் வர வேண்டும்; அப்போது தான், நேர்மையான ஆட்சியாளர்கள் கிடைப்பர்.

-அஜயன் பாலா


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moorthy moorthy - chennai,இந்தியா
14-மார்-201916:01:14 IST Report Abuse

moorthy moorthyஆகச்சிறந்த பதிவு.சமுக அக்கறை கொண்டது.

Rate this:
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
14-மார்-201915:01:36 IST Report Abuse

M.SHANMUGA SUNDARAMபணம் வாங்கி கொண்டு நேர்மையாக வோட்டளிக்கும் ஏழைகள் உள்ளதால் அரசியல் வாதிகள் யாருக்கும் பயப்படுவதில்ல்லை. தொகுதி வளர்ச்சி பற்றி கவலை படுவதும் இல்லை. பண அரசியல் ஒழிந்தால் தான் நேர்மையான பிரதிநிதிகளை காண முடியும். நாடு முன்னேறும்.

Rate this:
VG.Gowtham - Boon lay,சிங்கப்பூர்
14-மார்-201910:49:13 IST Report Abuse

VG.Gowthamஇதுவே நிதர்சனம்…...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X