அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு ஒரு தொகுதி

Added : மார் 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா.,வுக்கு ஒரு தொகுதி

சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., நேற்று இணைந்தது. அக்கட்சிக்கு, ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனியார் ஓட்டலில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சிக்கு, நேற்று மாலை, 3:45 மணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன், கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். மாலை, 4:00 மணிக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் வந்தனர். அதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே, கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது.

த.மா.கா.,விற்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஒப்பந்தத்தில், முதல்வர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.கூட்டணி உடன்பாடு குறித்து, பன்னீர்செல்வம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், த.மா.கா.,வும் கூட்டணி அமைத்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும், தேர்தலை சந்திக்க, நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

த.மா.கா.,விற்கு, ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்படுகிறது.சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, த.மா.கா., தன் முழு ஆதரவை அளிக்கும்.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, தற்போதைய நிலவரப்படி, தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.வாசன் கூறுகையில், ''இக்கூட்டணி, தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும், அமோக வெற்றி பெறும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மார்-201912:00:48 IST Report Abuse
Matt P உங்க கூட்டணியில் எல்லோரும் தோற்று நீ மட்டும் ஜெயிச்சுட்டா ...எப்படி இருக்கும் ஒரு கற்பனை பண்ணி பார்த்தேன் .நடந்தாலும் நடக்கும் ....அதுவரைக்கும் வாசமில்ல்லா மலர் இது பாடியிட்டு இரு ..
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மார்-201911:56:57 IST Report Abuse
Matt P ஏழைக்கேத்த எள்ளுருண்டை.
Rate this:
Share this comment
Cancel
sundar - chennai,இந்தியா
14-மார்-201910:49:21 IST Report Abuse
sundar ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக மற்றும் சில ஊடகங்கள் திமுக அபார வளர்ச்சி பெற்று வெற்றி பெரும் என்ற மாய தோற்றத்தை ஒவ்வொரு நாளும் தேர்தல் வரை பரப்பி மேலும் எதிர்பாராத சம்பவங்களை ஆளுங்கட்சிக்கு எதிராக திருப்பி அதில் குளிர் காயும். முடிவு தோல்வி கண்டு விரக்தியில் மக்களை சோற்றில் அடித்த பிண்டங்கள் மற்றும் தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேடு போன்று புலம்பும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X