பாதை மறுப்பு: சடலத்தை தோளில் சுமந்த அவலம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதை மறுப்பு: சடலத்தை தோளில் சுமந்த அவலம்

Added : மார் 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுக்கோட்டை:பொதுப் பாதையில் அனுமதிக்க மறுத்ததால், இறந்தவர் சடலத்தை, தோளில் சுமந்து, இடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, மைலன்கோன்பட்டியில், அரசு புறம்போக்கு இடத்தில், இலங்கை தமிழர்களின், 15 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் வசிக்கும் இடத்துக்கு, கடந்த ஆண்டு, வருவாய் துறையினர் மூலம், பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.இலங்கை தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த ரெங்கசாமி, 60, என்பவர், உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடலை, அந்த பாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.ரெங்கசாமி உடலை, இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதுகாப்பு கோரி, அவரது தம்பி மேகநாதன், கறம்பக்குடி போலீசில், மனு கொடுத்தார். போலீசார், இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தியும், எதிர் தரப்பினர், சமாதானம் அடையவில்லை.
இதனால், இறந்தவரின் உடலை தோளில் சுமந்தபடி, வருவாய் துறையினர் அமைத்துக் கொடுத்த பாதையில் எடுத்துச் சென்று, போலீசார் துணையுடன், அடக்கம் செய்தனர்.'பொது பாதையை ஆக்கிரமித்து, இடுகாட்டுக்கு சடலத்தை கொண்டு செல்ல விடாமல் தடுத்தவர்களை, கைது செய்யாத போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201910:50:34 IST Report Abuse
Saleem எந்த மதமா இருந்தாலும் மனிதாபிமானம் தேவை ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-மார்-201908:59:58 IST Report Abuse
Srinivasan Kannaiya இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான் என்பதை உணரவில்லையே
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-மார்-201916:26:01 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இறப்பும் கூடவா நிம்மதியை தரலே அடக்கன்ராவிகலா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X