பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்

Added : மார் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 மாணவி மூளைச்சாவு உடல் உறுப்பு தானம்

வேலுார்:மூளைச்சாவு அடைந்த, பள்ளி மாணவியின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.

ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி, 35; தனியார் கல்லுாரியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, இரண்டு மகள்கள். மூத்த மகள், லிக்கிதா, 12, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை, 8:00 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல்உறுப்புகளை தானம் செய்ய, தந்தை பாலாஜி, சம்மதம் தெரிவித்தார்.

மாணவியின் கண்கள், கிட்னி, வேலுார், சி.எம்.சி., மருத்துவமனைக்கும், இதயம், சென்னை போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

வியாபாரி உடல் தானம்:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த சிவன்குறிச்சியைச் சேர்ந்தவர் நாகலிங்கம், 73; ஜவுளி வியாபாரியான இவர், வயது முதிர்வின் காரணமாக, நேற்று இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடலை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அவரது மகன்கள், தானமாக வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201908:55:43 IST Report Abuse
Srinivasan Kannaiya லீக்கிதா இறந்தும் பல உயிர்களாக அவதாரம் எடுத்து உள்ளார்...
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
14-மார்-201905:37:35 IST Report Abuse
sathiya narayanan உறுப்பு தானத்தில் அரசு மருத்துவமணியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அந்த மனைவியின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் பெற்றோருக்கு என்னுடைய மனமார்ந்த அறுத்தல்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X