பொது செய்தி

தமிழ்நாடு

பாரபட்சமின்றி விசாரிப்போம் சி..பி.சி.ஐ.டி., ஐ.ஜி., உறுதி

Added : மார் 14, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
கோவை:''பொள்ளாச்சியில், பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு ஆளான வழக்கை, பாரபட்சமின்றி நேர்மையாக விசாரிப்போம்,'' என, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., ஸ்ரீதர் கூறினார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவன், திருநாவுக்கரசு,25; எம்.பி.ஏ., பட்டதாரியான இவன், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களிடம், 'பேஸ்புக்' மூலம் பழகி, பங்களாவுக்கு அழைத்துச் சென்று, பாலியல் சித்ரவதை

கோவை:''பொள்ளாச்சியில், பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு ஆளான வழக்கை, பாரபட்சமின்றி நேர்மையாக விசாரிப்போம்,'' என, சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., ஸ்ரீதர் கூறினார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவன், திருநாவுக்கரசு,25; எம்.பி.ஏ., பட்டதாரியான இவன், கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களிடம், 'பேஸ்புக்' மூலம் பழகி, பங்களாவுக்கு அழைத்துச் சென்று, பாலியல் சித்ரவதை செய்து, ஆபாச படம் எடுத்துள்ளார்.


நட்புபாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து, திருநாவுக்கரசு, இவனுக்கு உடந்தையாக இருந்த, சபரிராஜன், 25, சதீஷ், 28, வசந்தகுமார், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் விசாரணையில், பெண்கள் மற்றும் மாணவியரிடம் பேஸ்புக் மூலம் திருநாவுக்கரசு நட்பு ஏற்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, சொகுசு காரில் அழைத்துச் சென்று, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.

நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச வீடியோவை காட்டி, 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது.திருநாவுக்கரசு உட்பட நான்கு பேரும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டதால், நேற்று கோவை வந்த, ஐ.ஜி., ஸ்ரீதரிடம் வழக்கு ஆவணங்களை, எஸ்.பி., பாண்டியராஜன் ஒப்படைத்தார்.


தொடர்புஇது குறித்து, ஐ.ஜி., ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:பொள்ளாச்சி வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், மாவட்ட காவல் துறை ஒப்படைத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., நிஷா தலைமையில், ஒரு டி.எஸ்.பி., மற்றும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், எத்தனை பேருக்கு தொடர்புள்ளது என்பது விசாரணையில் தெரியவரும். அனைத்து கோணத்திலும் விசாரிப்போம். கைது செய்யப்பட்டவர்கள், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, விசாரிக்கப்படுவர்.


தகவல்வழக்கு தொடர்பாக, யார் எந்த தகவல் கொடுத்தாலும், வீடியோ கொடுத்தாலும், அவற்றை உள்வாங்கி, எது உண்மையோ, அதன் அடிப்படையில் விசாரிக்கப்படும்.சி.பி.ஐ., விசாரணை துவக்கும்போது, அவர்களிடம் அனைத்து ஆவணங் களையும் ஒப்படைப்போம். இவ்வழக்கை பாரபட்சமின்றி, நேர்மையாக விசாரிப்போம்.இவ்வாறு, ஐ.ஜி., ஸ்ரீதர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
18-மார்-201911:08:22 IST Report Abuse
நக்கீரன் கிழிப்பீங்க.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-மார்-201916:39:36 IST Report Abuse
Girija மிஸ் கால் பேஸ் புக் போன்ற விவகாரங்களின் விபரீதம் எந்த கல்லூரி பெண்ணிற்கும் இன்னும் தெரியவில்லை என்றால் நம்பமுடியாது. முன் பின் தெரியாதவன் மொபைலில் பேசுகிறான் என்றால் கூடவா வயது வந்த பெண்ணிற்கு இது ஆபத்து என்று தெரியாது ? இதில் பெற்றோர்களை குறை சொல்ல முடியாது இந்த பருவத்தில் ஒரு முறைக்கு இரண்டு முறை எதையாவது கேட்டாலே உனக்கு என் மேல் சந்தகம் என்று பெற்றோர்களையே முறைக்கும் பருவம். பெற்றோர்கள் இந்த விஷயத்திலும் படிப்பிலும் கண்டிப்பு காட்டினால் தற்கொலை வீட்டைவிட்டு ஓடுவது போன்ற விபரீத செயல்களில் வேறு இறங்கிவிடுவார்கள் என்று எத்தனை பெற்றோர்கள் தினமும் செத்து பிழைக்கிறார்கள் என்று பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு தான் தெரியும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பெற்றோர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆலோசனை கவுன்சிலிங் என்ற பெயரில் நாற்பது வயது ஆண் / பெண் இணைந்த ngo ஜொள்ளு கூட்டங்களின் தொல்லை குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்துள்ளது
Rate this:
ramadass - mayiladuthurai,இந்தியா
18-மார்-201913:19:33 IST Report Abuse
ramadassயுவர் கமெண்ட்ஸ் சரியானது? ஆண்பிள்ளைகளை விட இன்று பெரும்பாலான பெண்கள் (படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும்) காதல் என்ற பெயரில் காமத்துக்காக FACE BOOK மூலம் ஆண்களை தொடர்புகொள்ள்கிறார்கள். இந்த கேவலமான பெண்களை பெட்ர பெற்றோர்களை என்ன சொல்வது. பொள்ளாச்சி சம்பவத்துக்கு முழுக்க முழுக்க அடிப்படை காரணமானவர்கல் பாதிக்கப்பட்ட பெண்களே. இந்த பெண்கள் சமுதாயம் திருந்தாதவரையும் இதே போன்று சம்பவத்தினை ஆண்டவனால் கூட திருத்தமுடியாது....
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
17-மார்-201907:31:27 IST Report Abuse
Natarajan Ramasamy தொலை பேசி,தொலை தொடர்புக்காக மட்டும் உபயோகப்படுத்தவேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ,தொலை தொடர்புக்காக மட்டும் உபயோகிக்க கூடிய கேமரா இல்லாத போன் தவிர மற்ற போன் களை, பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். இது படம் எடுக்கும் மற்றும் படம் பார்க்கும் கும்பலையும் குறைக்கும். இந்த அசிங்கமான கலாச்சார சீரழிவுக்கு காரணம் யார் யார்? பெற்றோர்கள் பெற்றோர்கள் பெற்றோர்கள் மட்டுமே. தன் பிள்ளை / பெண் என்ன செய்கிறாள் என்பது தெரியாத பெற்றோர்கள் இந்த சமுதாயத்தில் இருக்கவே அருகதியற்றவர்கள். தன் பிள்ளைகளின் செல்போன் களிலும் லேப்டாப் களிலும் STICK களிலும் உள்ளதை இனியாவது கண்காணியுங்கள்.பிள்ளைகளின் browzing கணக்கை கண்காணியுங்கள். இது வேலை செய்யும் இளம் பெண்களின் பெற்றோர்களுக்கும் பொருந்தும்.தன் பிள்ளை, பெண் களுடன் நேராக அரவணைப்புடன் பேசாத காரணத்தால் இது பூதாகரமாக பரவி வருகிறது. போலீஸ் குற்றம் வெளியே வந்தால் மட்டுமே ஏதும் செய்யமுடியும். இரவு நேரத்தில் பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிக்கும் கலாச்சாரத்தை ஒழிக்கவேண்டும். அந்த கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டு பரப்பும் சினிமா, சின்ன திரைகள் தணிக்கை குழுக்கள் 50 % காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X