சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலி

Added : மார் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பொள்ளாச்சி அருகே  கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி -- உடுமலை சாலையில், பி.ஏ.பி., கால்வாயில் கார் கவிழ்ந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை, மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ், 44 - சித்ரா, 40. மற்றும் அவர்களது உறவினர்கள் என, எட்டு பேர், நேற்று முன்தினம், 'நிசான் சன்னி' காரில் பழநி கோவிலுக்கு சென்றனர். தரிசனம் முடித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர். காரை பிரகாஷ் ஓட்டி வந்தார்.

பொள்ளாச்சி - உடுமலை சாலையில், கெடிமேடு அருகில், பி.ஏ.பி., கால்வாய் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக கால்வாய் தடுப்பு சுவரில் மோதி, கால்வாயில் கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோமங்கலம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், கிரேன் உதவியுடன் கயிறு கட்டி கார் மீட்கப்பட் டது.

காரினுள் இருந்து, ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.காரின் கண்ணாடிகள் உடைந்ததில் காரினுள் இருந்த, இரு குழந்தைகள், கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் சடலத்தை தேடும் பணியில், கோமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர், விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீட்பு பணியில் சிரமம்!



கெடிமேடு, பி.ஏ.பி., கால்வாய், 20 அடி ஆழம் உள்ளது. கால்வாயில், 900 கனஅடி தண்ணீர் செல்கிறது. யானையே தவறி விழுந்தாலும், தண்ணீரின் வேகத்தில் அடித்து சென்று விடும். இதனால், விபத்து ஏற்பட்டதும், காரில் இருந்து தவறிய குழந்தைகள் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த கான்கிரீட் கரையில் மோதியதால், கார் அடித்துச் செல்லவில்லை.இந்நிலையில், தீயணைப்பு வீரர் உபாபதி, 10 அடி ஆழத்தில் இருந்த காரை கண்டறிந்து, மேலே கொண்டு வர போராடினார். 1 மணி நேர போராட்டத்துக்கு பின், காரில் கயிறுகளை கட்டி கிரேனில் துாக்கி வெளியே எடுத்தனர்


குறுகிய பாலமே விபத்துக்கு காரணம்



பொள்ளாச்சி - உடுமலை சாலையில், பல பகுதிகள் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், கெடிமேடு கால்வாய் பாலம், விரிவுபடுத்தப்படாமல் மிகக் குறுகலாக உள்ளது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 'குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்' என, மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால், பாலம் விரிவுபடுத்த திட்டமிடப்படவில்லை.

கடந்த ஆண்டு நடந்த விபத்தில், கேரளாவைச் சேர்ந்த வாலிபர்கள், நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்கள் சென்ற கார், இதே இடத்தில், விபத்துக்குள்ளாகி, கால்வாயில் மூழ்கியது.தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பாலத்தை விரிவுபடுத்தாமல், அந்த இடத்தில், 'குறுகிய பாலம் கவனமாக செல்லவும்' என, எச்சரிக்கை அறிவிப்பு மட்டும் வைத்துள்ளனர். உள்ளூர் வாசிகளே கவனம் சிதறினால், விபத்துக்குள்ளாகும் பகுதியாக உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, நான்கு வழிச்சாலை பாலம் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக திட்டமிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மார்-201909:03:45 IST Report Abuse
Srinivasan Kannaiya பொள்ளாச்சிக்கு போதாத காலமோ... இப்போதான் கன்னியர்கள் கசக்கப்பட்டார்கள்.. இன்றோ மழலையர் மாய்ந்தனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X