மசூத் விவகாரம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (33)
Advertisement

வாஷிங்டன் : ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு சீனாவிற்கு அமெரிக்கா தனது கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் சீனாவை எச்சரித்துள்ளன.





மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. இது தொடர்பாக மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக இந்தியா எடுக்கும் முயற்சிக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.




சீனாவின் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி, சீனா தொடர்ந்து இது போன்று முட்டுக்கட்டை போட்டு வந்தால் பிற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வேறு விதமாக கட்டாய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்றார்.
சீனாவின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதை விட தெற்காசியாவில் தனது ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ளவே பார்க்கிறது என அமெரிக்க செயலாளர் மைக்கேல் போம்பியோ தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
15-மார்-201906:17:30 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பாம்பை கொஞ்சிண்டுருக்கான் சீனாக்காரன் அவனையேகொத்தும் பார்த்துண்ணே இருங்க அவன் அந்தமசூத் மொகரையே தாண்டவம் ஆடுது கபடம் சீனாக்காரனையேபோட்டு தள்ளுவான்
Rate this:
Share this comment
Cancel
Xerox - ,
14-மார்-201917:36:46 IST Report Abuse
Xerox நல்ல செய்தி
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
14-மார்-201914:55:21 IST Report Abuse
Raj ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை என்பது வன்முறை கும்பலின் கூடாரம் ஆகிவிட்டது இதிலிருந்து சீனா வெளியேற்றப்படவேண்டும் அதற்குப்பதிலாக இந்தியா அனுமதிக்கப்படவேண்டும் கொஞம் கூட சூடு சொரணை இல்லாமல் சீன பொருட்களை மற்றும் சீன நாட்டு கம்பெனிகளின் மொபைல் போன் களை வாங்கி அவர்களுக்கும் நாமும் ஒரு விதத்தில் ஆதரவு தருகிறோம் நாற்பது வீரர்களை கொன்றதற்கு நாமும் ஒரு வகையில் காரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X