சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பனிக்கட்டி உருகும் ஆர்டிக்!

Added : மார் 14, 2019
Advertisement
பனிக்கட்டி உருகும் ஆர்டிக்!

உலகிலுள்ள ஐந்து கடல்களுள் ஒன்றான ஆர்டிக், உள்ளதிலேயே ஆழம் குறைந்த, சிறிய கடல். பனிப் பாறைகள் உறைந்திருப்பது தான் சிறப்பம்சம். ஆனால், 2030 வாக்கில், பனிப்பாறைகள் இல்லாத, முதல் கோடைக் காலத்தை ஆர்டிக் கடல் சந்திக்கவிருப்பதாக, 'ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில், வெளியான ஆய்வு கணித்துள்ளது.
இயல்பாகவே கடல் நீரின் தட்பவெப்பம், 10 முதல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்ச்சியிலிருந்து கதகதப்பிற்கும், பின், மீண்டும் குளிர்ச்சிக்கு மாறுவது உண்டு.
இத்தோடு புவி வெப்பமாதலும் சேர்ந்துக் கொள்வதால், தற்போது உறை பனிப் பாறைகளோடு காட்சியளிக்கும் ஆர்டிக், அடுத்த பதினோரு ஆண்டுகளில் பனிப் பாறைகள் உருகி, சாதாரண கடல் போலக் காட்சியளிக்கும் நிலை ஏற்படலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X