சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சூரிய ஒளி மூலம் ஹைட்ரஜன்

Added : மார் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சூரிய ஒளி மூலம் ஹைட்ரஜன்

சூரியக் கதிர்களை ஆற்றலாக மாற்ற, பல வழிகள் உண்டு. அதில் ஒரு வகை தான் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது. பெல்ஜியத்தை சேர்ந்த கே.யு., லுாவென் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சூரிய ஒளியிலிருந்து ஒரு நாளைக்கு, 250 லிட்டர் வரை ஹைட்ரஜனை தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர்.
ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய, 20 சூரிய ஒளி மின் பலகை மற்றும், காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் இந்தக் கருவி பயன்படுத்துகிறது. உற்பத்தியாகும் ஹைட்ரஜனை நிலத்தடியில் பதியப்பட்ட ஒரு கலனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த கருவியில் உள்ள இன்னொரு வசதி, சூரிய ஒளி அதிகமாக உள்ளபோது, நிறைய ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டால், சூரியன் எட்டிப்பார்க்காத மங்கலான மாதங்களின் அந்த சேமிப்பை பயன்படுத்த முடியும்.
ஹைட்ரஜனை நேரடியாக வாகன எரிபொருளாகவோ, வெப்பமாகவோ, மின்சாரமாகவோ மாற்றிக்கொள்ள முடியும். 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட இந்த கருவிக்கான ஆராய்ச்சி தற்போது வெளி உலக சோதனைக்கு தயாராகியிருக்கிறது. விரைவில் பெல்ஜியத்திலுள்ள விவசாய கிராமத்தில் இந்தக் கருவியை விஞ்ஞானிகள் சோதிக்கவுள்ளனர். அது வெற்றி பெற்றதும், சூரிய ஒளி மூலம் ஹைட்ரஜன் தயாரிக்கும் தங்கள் கருவியை வர்த்தக உற்பத்திக்கு எடுத்துச் செல்வர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
25-மார்-201907:46:16 IST Report Abuse
Chanemougam Ramachandirane வாஸ்த்துக்கள் , இவ்வாறான கண்டுபிடிப்பை அங்கீகரிக்க வேண்டும் , இந்தியாவில் யார் எதை கண்டு பிடித்தாலும் அதை முதலில் அங்கீகரிக்கணும் படிப்பு இல்லை என்று உதாசீனம் பண்ண கூடாது ஏன் இதை அங்கீகரிக்கும் குஸு ஏன் அறிய கண்டுபிடிப்பை வெளி உலகத்திற்கு இவர்கள் கண்டு பிடித்து வெளி படுத்தலாமே . Research செலவிடும் பணத்தை ஒரு தொகையை பள்ளி மாணவர்கள் பயன் பெற்று கண்டு பிடிக்க ஒடுக்க வேண்டும் மத்திய அரசும் மாநில அரசும் இதுதான் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் இனிமேல் ஹைட்ரஜன் மூலம் சேவைகளை பெறவும் சுற்று சோசல் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்கணும் இந்தியாவில்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
14-மார்-201917:00:20 IST Report Abuse
Gopi நன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X