விஜயகாந்துடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்துடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (52)
Advertisement

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற ராமதாஸ், அவரை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் போது பாமக அன்புமணி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரிக்கவே வந்தோம். சந்திப்பு நல்லபடியாக முடிந்தது. தேமுதிக.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றார். தேமுதிக.,வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், தாமதம் என்பது வழக்கமானது. உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதிலளிக்கிறேன் என்றார்.


பாமக நிறுவனர் ராமதாஸ், முதன் முறையாக விஜயகாந்த்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இருவரும் ஒரே கூட்டணியில் இருந்த போதிலும் சந்தித்தது கிடையாது. இந்நிலையில் முதல் முறையாக இன்று சந்தித்து பேசி உள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை ராமதாஸ் மறுத்துள்ளார். விஜயகாந்தை தொடர்ந்து இன்று மாலை தமாகா தலைவர் ஜி.கே.வாசனையும் ராமதாஸ் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.










வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
15-மார்-201923:22:12 IST Report Abuse
Vetri Vel சைகையில் பேசியிருப்பார்களோ... புரிந்ததும் புரியாததுமா.. ரெண்டு வியாபாரிகளும் துண்டை சுருட்டிக்கிட்டு நடையை கட்டி இருப்பார்கள்... கூட்டு சேர்ந்த கும்பல் அப்படி....
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
14-மார்-201918:29:56 IST Report Abuse
சீனி ராமதாஸ்-விஜயகாந்த் சந்திப்பது மாட்டு யாவாரிங்க ரெண்டு பேர் சந்திக்கிறமாதிரி செய்திய படிங்கோ.....🤣🤣👌
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
14-மார்-201917:09:20 IST Report Abuse
Rahim Gani ஒரு குட்டையில் கலந்த இரண்டு வியாபாரிகள் சந்திப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே
Rate this:
Share this comment
14-மார்-201919:40:40 IST Report Abuse
ARUNACHALAM, Chennaiஎப்படி நாகர்கோவிலில் கூடியவர்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X