காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல்?

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
காஷ்மீர், சட்டசபை தேர்தல், பிரதமர் மோடி, பா.ஜ., கவர்னர், ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது.

பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி காஷ்மீரில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக மோடி அரசு மீது அம்மாநில கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.நாட்டின் பாதுகாப்பை மோடி திறமையாக கையாள்வதாக ஏற்கனவே நாடு முழுவதும் பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது. எனவே இந்த நேரத்திலேயே காஷ்மீரிலும் லோச்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்த மோடி விரும்புகிறாராம்.எனவே இன்னும் சில நாட்களில் காஷ்மீர் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மோடி - கவர்னர் சந்திப்பு

கடந்த மார்ச் 12ம் தேதி டில்லி வந்த காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், மோடியுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். மாநிலத்தின் பாதுகாப்பு, தேர்தல் நடத்த மாநில அரசு தயாராக இருக்கிறதா போன்ற விஷயங்களை அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. காஷ்மீரில் ஜெய்ஷ் - இ - முகம்மது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் ராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர். எனவே தேர்தல் நடத்தலாம் என்ற எண்ணத்துக்கு அவர்கள் வந்துள்ளனர்.


லோக்சபா தேர்தலுடன் காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்படாததால், மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ‛‛வலிமையான தலைவர் என்று கூறிக்கொள்ளும் மோடியால் ஏன் காஷ்மீர் தேர்தல் நடத்த முடியவில்லை. பாகிஸ்தானிடம் சரண் அடைந்தது போல் ஆகிவிட்டது'' என்று குற்றம் சுமத்தி இருந்தனர்.


தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்த்நாக் லோக்சபா தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. அதுவும் 3 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவன் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிப்.14 அன்று சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடந்த புல்வாமா, இந்த தொகுதிக்குள் தான் அமைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
15-மார்-201902:57:12 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) வருடத்திற்கு ஆறாயிரம் கோடி வரை மானியவிலையில் அவர்களுக்கு இலவசமாக கொடுத்து என்ன சாதித்தோம் ? மீண்டும் பாகிஸ்தானுடன் மக்களை பரிமாறிக்கொள்ளவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-மார்-201917:29:44 IST Report Abuse
ஆரூர் ரங் மறுபடியும்  யாருக்கும் மெஜாரிட்டியில்லாமல் தொங்கு அரசு  அமையும். அது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த உதவாது. சராசரி இஸ்லாமிய மனநிலைக்கு தேர்தலே வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-மார்-201916:40:08 IST Report Abuse
A.George Alphonse The Jammu and Kashmir state is unfit for State Assemply Election and the elected state government is also can not complete it's full term due to continue Terrorists threats and it can not reduce or eliminate it fully.This state may give MPs but it will only increase the strength of the ruling party or it's Koottani . Instead of wasting the money on elections it is better to be direct control of central government forever
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X