கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை தொகுதி தேர்தல் தேதியை மாற்ற மறுப்பு

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (29)
Advertisement
மதுரை, தேர்தல் கமிஷன், ஐகோர்ட் மதுரை கிளை, மறுப்பு

மதுரை: மதுரை லோக்சபா தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. தேர்தல் நேரத்தை 2 மணி நேரம் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்ய தயாராக உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.


பதிலளிக்க உத்தரவு


'லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்., 18ல் ஒரே கட்டமாக நடத்தப்படும்' என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்று பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது. 'இந்த நிகழ்ச்சிகளுக்கு, ஐந்து மாவட்ட பக்தர்கள் கூடுவர். எனவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்' என, அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, கலெக்டர் நடராஜன் வாயிலாக தேர்தல் கமிஷனுக்கு மனுவும் அளித்தனர்.
ஐகோர்ட் மதுரை கிளையிலும் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு இது குறித்து பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது.


பரிசீலனை


இந்நிலையில், இன்று, ஐகோர்ட் மதுரை கிளையில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. ஓட்டுப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிப்பது குறித்து பிரசீலனை செய்ய தயாராக உள்ளோம். ஏப்.,19ம் தேதி பொது விடுமுறை. இதனால், ஏப்.,18 ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாது எனக்கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாம் என கருத்து தெரிவித்தனர்.







பாதிப்பு


இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திட்டமிட்ட நிகழ்வை மாற்ற முடியாது. தமிழகத்தில் மட்டும் தேர்தல் தேதியை மாற்றினால், அது மற்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அதற்கு வாய்ப்பில்லை எனக்கூறினார்.


சரியல்ல


இதனை தொடர்ந்து நீதிபதிகள், கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்திற்கு அக்கறை இல்லையா? சூழலை கருத்தில் கொள்ளாமல், முடிவெடுப்பது சரியல்ல. விழாக்காலங்களில் தேர்தல் நடத்தினால், ஓட்டுச்சாவடிகள் இருக்கும். ஆனால், மக்கள் ஓட்டுப்போட வர மாட்டார்கள். இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும். தவறினால், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-201922:58:00 IST Report Abuse
ஆப்பு நடக்கப் போவது இந்து கோவில் திருவிழா. இந்துக்கள் வாக்களிக்கலைன்னா அதிமுக, பா.ஜ கூட்டணி வேட்பாளர்களுக்கு பாதிப்பு.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-201901:22:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்பிடீங்கிறீங்க? எனக்கி அப்பிடி தோனில்லா.....
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-மார்-201921:30:00 IST Report Abuse
J.Isaac திட்டமிட்டே தேர்தல் கமிஷனால் அரசு துணையுடன் நடத்தப்படுகின்ற நாடகம். வியாழன் வெள்ளி கிறிஸ்தவர்களுக்கு முக்கிய தினம் என்று தேர்தல் கமிஷனுக்கு தெரியாதா? மொத்தத்தில் குழப்பத்தை உருவாக்கி அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-மார்-201921:27:40 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren who is this lawyer for election.commission? his motive is suspecting. when he know can not be 100 why he not accept the reality and advise the election commission to revise the date.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X