ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து 6 பேர் பலி

Updated : மார் 15, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (19)
Advertisement
MumbaiBridgeCollapse, மும்பை, நடை மேம்பாலம்

மும்பை: மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 6 பேர் உயிர் இழந்தனர். 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






இடிபாடுகளுக்குள் 10 முதல் 12 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.






உதவி

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரயில்வே அதிகாரிகள், டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர் எனக்கூறப்பட்டு உள்ளது.







வேதனை

முதல்வர் பட்நாவிஸ் வெளியிட்ட அறிக்கை: ரயில் நிலைய நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது கவலை அளிக்கிறது. ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து விரைவாக மீட்பு பணிகளை மேற்கொள்ள , மும்பை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மீட்பு படையினருடன் பேசியுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-201918:00:18 IST Report Abuse
ஆப்பு வெள்ளைக் காரன் காலத்துல கட்டுன ரயில் நிலையம் அப்பிடியே இருக்கு...இவிங்க கட்டுன இரும்பு பாலம் உடைஞ்சு போச்சு. அங்கேயும் சமூக நீதி தானே?
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-மார்-201914:35:11 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி நிறைய நடக்கின்றது அதுவும் மும்பையில் .இது விபத்தாக தோன்றவில்லை சதியாக தோன்றுகிறது.இன்னொரு தீவிர வாத்தின் வடிவம்.
Rate this:
Share this comment
Cancel
R.Suresh Kumar - Chennai,இந்தியா
15-மார்-201912:05:03 IST Report Abuse
R.Suresh Kumar சென்னையின் பல ரயில் நிலைய பாலங்களும் மிக மோசமான நிலையில் தான் உள்ளன. பாலத்தில் நடக்கும் போது, அதிர்ந்து ஆடுவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். பாலத்தில் ஏறுவதற்கான படிகளோ அதிலும் கொடுமை. உரியவர்கள் நடவடிக்கை எடுத்தால், இது போன்ற உயிர் சேதங்களை தவிர்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X