கணவனை எரித்து கொன்ற மனைவி உட்பட மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை எரித்து கொன்ற மனைவி உட்பட மூவர் கைது

Added : மார் 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement


பெரம்பலுார்: அரியலுார் அருகே, கணவனை எரித்துக்கொலை செய்த, மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அரியலுார், மத்துமடக்கியை சேர்ந்த விவசாயி குணசேகரன், 42. இவருக்கு, மஞ்சுளா, 40, என்ற மனைவியும், 22 வயதில் மகளும், 19 வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், மகள், காதல் திருமணம் செய்ததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால், மஞ்சுளா கோபத்தில் தாய் வீடு சென்று விட்டார். நேற்று முன்தினம் அங்கு சென்ற குணசேகரன், மஞ்சுளா குடும்பத்தினருடன் தகராறு செய்து, அங்கிருந்த வைக்கோல் போருக்கு தீ வைத்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா, தன் தம்பி வேல்முருகன், 36, தந்தை துரைசாமி,65, ஆகியோருடன், நேற்று முன்தினம், குணசேகரன் வீட்டுக்கு சென்று, அங்கு துாங்கிக் கொண்டிருந்தவரை, அடித்து கொன்று எரித்த பின், தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, மஞ்சுளா உட்பட மூவரையும் கைது செய்தனர்.



வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-மார்-201908:53:30 IST Report Abuse
Srinivasan Kannaiya கண்ணகி கணவனுக்காக மதுரையை எரித்தாங்க இந்த அம்மா கணவனையே எரித்துவிட்டது
Rate this:
Share this comment
Cancel
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர் - கொல்டிபுரம் ,உகான்டா
15-மார்-201914:48:23 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர் இத்தனை ஆண்டுகள் தாம்பத்தியத்தை தாண்டி கணவனை கொன்றாள் என்றால் அவன் என்ன பாடுபடுத்தினானானோ
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-மார்-201913:27:19 IST Report Abuse
r.sundaram நல்ல தம்பதிகள். இவர்கள் வளர்த்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X