பொது செய்தி

தமிழ்நாடு

உரிய ஆவணத்துடன் பணம் எடுத்து செல்ல தடையில்லை

Updated : மார் 14, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement

சென்னை: ''தேர்தலையொட்டி பணம் பரிமாற்றத்தை தடுக்க, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஓட்டல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். தனி நபர்கள், உரிய ஆவணங்களுடன், பணம் எடுத்துச் செல்ல தடையில்லை,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை, கடுமையாக அமல்படுத்தி வருகிறோம். வருமான வரித்துறையுடன் இணைந்து, பணப்பரிமாற்றத்தை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 3.39 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள், ஹாவாலா ஏஜன்சிகள், அடகு நிறுவனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பகுதிகள் அனைத்தும், கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விதிகளின்படி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல், பணப்பரிமாற்றம் இருந்தால், கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிக்கல் இல்லாமல், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. பணம் நடமாட்டத்தை கண்காணிக்க, சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனையின் போது, வேட்பாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், தங்களின் வாகனத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கம்; 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் எடுத்து சென்றால், பறிமுதல் செய்யப்படும்.

உரிய ஆவணங்களுடன், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும், பறிமுதல் செய்யப்படாது. ஆனால், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பணம் பறிமுதல் செய்தால், 24 மணி நேரத்திற்குள், போலீசார் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணம், உரிய ஆவணங்களை சரி பார்த்த பின் ஒப்படைக்கப்படும். ஆவணங்கள் சரிபார்க்க, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


நீங்களும் புகார் செய்யலாம்?


*பணம் எடுத்து செல்வது தொடர்பாக, வருமான வரித்துறை, சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. பண பரிமாற்றம் தொடர்பாக, தனி நபர்கள் யார் வேண்டுமானாலும், 1800 425 6669 என்ற, கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில், தகவல் தெரிவிக்கலாம்

* எழுத்து பூர்வமாக தகவல் தெரிவிக்க விரும்புவோர், 044 - 2826 2357 என்ற எண்ணுக்கு, பேக்ஸ் அனுப்பலாம். இது தவிர, itcontrol.chn@gov.in என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம். மேலும், 94454 67707 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக தகவல் அனுப்பலாம்.


சுவர் விளம்பரம் கிடையாது


நகர் புறங்களில், பொது இடம், தனியார் இடம் எதிலும், சுவர் விளம்பரம் எழுத அனுமதி கிடையாது. ஊராட்சிகளில், தனி நபர் வீடுகளில் அனுமதி பெற்ற பின், சுவர் விளம்பரம் எழுதலாம். பொது இடங்களில் அனுமதி கிடையாது.தமிழகம் முழுவதும், பொது இடங்களில் இருந்த, 64 ஆயிரத்து, 385 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, தனியார் சுவர்களில் இருந்த, 24 ஆயிரத்து, 82 சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளதோடு, 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


துணை சபாநாயகர் மனு நடவடிக்கைக்கு உத்தரவு


'பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும், சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பப்படுகிறது. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, துணை சபாநாயகர் ஜெயராமன், தேர்தல் கமிஷனில், புகார் மனு கொடுத்திருந்தார்.

இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிதா சாஹு கூறியதாவது: துணை சபாநாயகர் ஜெயராமன் கொடுத்த புகார் மனு, போலீஸ், டி.ஜி.பி., மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வழங்கிய, வீடியோ காட்சிகள், சைபர் கிரைமுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-201917:30:20 IST Report Abuse
ஆப்பு ஆளும் கட்சியினர் மக்கள் பணத்தையே டைரக்டா வங்கி கணக்குலே பட்டுவாடா பண்ணியாச்சு.எதிர்க்கட்சியினர் பாடுதான் திண்டாட்டம். அவிங்களை கவுக்க எல்லோரும் சேந்து உழைக்கிறாங்கோ...
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201912:52:40 IST Report Abuse
ஆப்பு கார்ல போறவங்கள மட்டும்தான் சோதனை போடுவீங்களா? பஸ், ரயில்லே பணம் கடத்த மாட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel
15-மார்-201912:52:44 IST Report Abuse
ஆப்பு கார்ல போறவங்கள மட்டும்தான் சோதனை போடுவீங்களா? பஸ், ரயில்லே பணம் கடத்த மாட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X