கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் புகார்கள் சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும்: ஐகோர்ட்

Updated : மார் 15, 2019 | Added : மார் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: தமிழகத்தில் பதிவாகும் லோக்சபா தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுடன், தமிழகத்தில், ௧௮ சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்., ௧௮ல், ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. மதுரையில், சித்திரை திருவிழா வருவதால், மதுரை லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க கோரி, உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்கும்படி, தலைமை நீதிபதியிடம், தேர்தல் கமிஷன் சார்பில் முறையிடப்பட்டது.இதையடுத்து, தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மார்-201908:26:32 IST Report Abuse
Srinivasan Kannaiya நடந்தே அலுத்து பொய் விடுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-மார்-201906:20:27 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தேர்தல்ல இப்போதே குக்கர் தன்துண்டுருக்கானே தினகரன் அதுக்கு என்ன பதில் கிட்டும் பாத்திரப்பண்டம் காசு எதுன்னாலும் பிராடுதானுங்கோ
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-மார்-201906:00:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாலியல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க போட்ட அரசாணை போல இது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X