கொளஞ்சியப்பர் கல்லுாரி  விடுமுறைக்கு பின் திறப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொளஞ்சியப்பர் கல்லுாரி  விடுமுறைக்கு பின் திறப்பு 

Added : மார் 14, 2019
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லுாரி, 6நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லுாரி முதல்வர் அறையில், அம்பேத்கர் படத்தை ஒரு பிரிவு மாணவர்களும், ராமசாமி படையாட்சியார் படத்தை மற்றொரு பிரிவு மாணவர்களும் வைக்க முயன்றனர். கல்லுாரி முதல்வர் அனுமதி மறுத்ததால், நுாலகத்தில் வைத்து சென்றனர்.இதனால் ஏற்பட்ட பதட்டமான சூழலை அடுத்து 9ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை கல்லுரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.14 ம் தேதி, கல்லுாரி வழக்கம் போல் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்துபதட்டம் நிலவியதால் நேற்று முதல் வரும் 18ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு விடுமுறையை நீட்டித்து, நேற்று முன்தினம் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.இதற்கிடையே, கல்லுாரியில் முதல்வர் வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாணவர்கள் பிரச்னையை தவிர்க்க ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். இதனையேற்று, 6நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லுாரி நாளை (இன்று) முதல் திறப்பது என, முடிவு செய்யப்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X