மதுபான பாட்டில் கடத்தல்: கார் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுபான பாட்டில் கடத்தல்: கார் பறிமுதல்

Added : மார் 14, 2019
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, மதுபானம் கடத்திய காரைபறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் மெயின்ரோட்டில் (கடலுார்-சித்துார் சாலை) நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை 3ம் குழுவினர், தாசில்தார் ஜெயக்குமார்தலைமையில் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த கேஎல் 23 எம் 3475 என்கிற ேஹாண்டாய் அஸ்ரோ ஐ-20என்றஎண்ணுள்ள காரை சோதனை செய்த போது, 500 எம்.எல்., அளவுள்ள 58 மதுபான பாட்டில்கள்இருந்ததை கண்டு பிடித்தனர். மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்து, நெல்லிக்குப்பத்தில் உள்ள மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரள மாநிலம் தென் எஸ்பி மார்க்கெட்,லெபினிவாஸ் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர் பிசில் ,26; சேலம் நத்தம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்,38; அவரது மனைவி மஞ்சு,28; சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த யுவராஜ், யோகேஷ் ஆகிய 5 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X