கட்சிக் கொடிகள் அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்சிக் கொடிகள் அகற்றம்

Added : மார் 14, 2019
Advertisement

கிள்ளை:கிள்ளை அருகே ஆ.மண்டபத்தில் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னரும், ஆ.மண்டபம், சி.முட்லுார் உள்ளிட்ட சுற்று பகுதியில் கட்சிக் கொடிகள் வழக்கம் இருந்தது. இது குறித்து தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று காலையில் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டன. போலீசார் உதவியுடன் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் உள்ளிட்ட வருவாய் துறையினர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். கொடிகள் அகற்றப்பட்ட பின்னரே இடத்தை விட்டு அகன்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X