நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி: சப் கலெக்டர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி: சப் கலெக்டர்

Added : மார் 14, 2019
Advertisement

திட்டக்குடி:நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.திட்டக்குடி தாலுகாவில் நேற்று விருத்தாச்சலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டக்குடி தொகுதி முழுவதும் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. மேலும் 15ம் தேதி (இன்று) திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் ராமநத்தம் பகுதிகளில், அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இ-சேவை மையங்கள் மற்றும் பெரு வணிக வளாகங்களில் பொருட்களுக்கு வழங்கப்படும் பில் ரசீதுகளில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாசகங்கள் இடம் பெறசெய்யப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்கள் பெயரை சேர்த்துக் கொள்ளவும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 100 சதவீத ஒட்டுப்பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X