வங்கியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

Added : மார் 14, 2019
Advertisement

கடலுார்:தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, வங்கியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, வங்கியாளர்கள் மற்றும் தேர்தல் செவின கண்காணிப்பு குழுக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:வங்கியாளர்கள், வங்கியில் நடைபெறும் பண பரிமாற்றத்தை மிக துள்ளியமாக கண்காணித்திட்ட வேண்டும். மேலும் தனிநபர் வங்கி கணக்கில் அதிக அளவில் பண பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்களின் கணக்குகளை தேர்தல் செலவின கண்காணிப்பு குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இந்த பணிகளை வங்கியாளர்கள் மற்றும் தேர்தல் செலவின கணக்கு குழுவினர் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செய்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்தோஷினி சந்திரா,ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆனந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விநாயகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X