பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
சீனாவுக்கு, ஐ.நா., கவுன்சில் உறுப்பு நாடுகள்...
பயங்கரவாதி ஆதரவு செயல்பாடுகளால் கோபம்

நியூயார்க்: ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல், நான்காவது முறையாக, சீனா தடுத்துவிட்டது. இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள், 'சீனா தொடர்ந்து, இது போல் செயல்பட்டால், பிற உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, வேறு விதமாக நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, எச்சரித்துள்ளன.

சீனா,ஐ.நா., கவுன்சில்,உறுப்பு நாடுகள்,எச்சரிக்கை,பயங்கரவாதி ஆதரவு,கோபம்அண்டை நாடான, பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பு, ஜெய்ஷ் - இ - முகமது. இதன் தலைவன் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மத்திய அரசு மூன்று முறை முயற்சித்தது. ஒவ்வொரு முறையும், தன், 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவிடாமல், சீனா, தடுத்து விட்டது.


ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், சமீபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு,

ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள், கடும் கண்டனம் தெரிவித்தன. ஜெய்ஷ் அமைப்பு மீதும், அதன் தலைவன் மசூத் அஸார் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தன.


இதற்கிடையில், சமீபத்தில் நடந்த, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள், தீர்மானம் தாக்கல் செய்தன. 'இந்த தீர்மானத்துக்கு, மார்ச், 13க்குள், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படும்' என, பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது. எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், கடைசி நேரத்தில், தொழில்நுட்ப ரீதியாக சில கேள்விகளை முன்வைத்து, தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல், சீனா தடுத்தது.


'மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை ஆய்வு செய்ய, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என, சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது; இதனால், கடைசி நேரத்தில், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது. சீனாவின் கோரிக்கையை ஏற்று, ஆறு மாதம் வரை அவகாசம் அளிக்கப்படலாம். அதன்பின், மேலும், மூன்று மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்படலாம். அதனால், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு, மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முடியாத நிலையை, சீனா ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்த செயலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.


Advertisement

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டது, கவலை அளிக்கிறது. இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, நீதியின் முன் நிறுத்த, அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம். அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஆதரவு அளித்த, உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க விடாமல் செய்ததற்காக, சீனாவுக்கு, பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற உறுப்பு நாடுகள், கண்டனம் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து, அந்த நாடுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: சீனா, தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வந்தால், பிற உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து, வேறு விதமாக, கட்டாய நடவடிக்கைகள் எடுப்பதை தவிர, வேறு வழியில்லை. பயங்கரவாதத்துக்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டால், தெற்காசியாவில் அமைதியின்மையும், நிலையற்றதன்மையும் அதிகரிக்கும். பயங்கரவாத தலைவர்களையும், அமைப்புகளையும் பாதுகாக்க, சீனாவின் ஆதரவில், பாகிஸ்தான் குளிர் காய்கிறது. இவ்வாறு அந்த நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர், பாம்பியோ கூறுகையில், ''தெற்காசிய பிராந்தியத்தில், தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே, சீனா, இதுபோல் செயல்படுகிறது,'' என்றார்.

சப்பைக்கட்டு:

மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை தடுத்தது பற்றி, சீனா வெளியுறவு செய்தி தொடர்பாளர், லுா காங் கூறியதாவது: சீனா தொடர்ந்து, பொறுப்பாகத் தான் செயல்படுகிறது. மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானத்தில் அவசரம் காட்டக் கூடாது. அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தால் மட்டும், பிரச்னை தீர்ந்து விடாது. இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு மூலம் தான், பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arunachalam - Tirunelveli,இந்தியா
15-மார்-201923:20:30 IST Report Abuse

arunachalamசீனாவுக்கு இந்த தறுதலை பவரை கோடுத்ததே தவறு. அதற்க்கு காங்கிரசின் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருதான் காரணம். இதை யாரும் பேசுவதில்லை.

Rate this:
PAZHANIVELAN R - neyveli,இந்தியா
15-மார்-201919:19:41 IST Report Abuse

PAZHANIVELAN Rசீனா பயங்கரவாதத்திற்கு துணை போகிறது. இது நன்றாக இப்பொழுது புரிகிறது. பிற்காலத்தில் இந்த பயங்கரவாதம் அந்த நாட்டையே ஒருநாள் அழித்துவிடும். அநியாயத்திற்கு துணை போகும் எந்த நாடும் சுபீட்சமாய் இருந்தது இல்லை.

Rate this:
natarajan s - chennai,இந்தியா
15-மார்-201916:38:50 IST Report Abuse

natarajan sநமது நாட்டின் பெரிய சாபக்கேடு பன்முகத்தன்மை என்ற பெயரில் நடக்கும் compromise தான். உலகத்திலேயே முதன் முதலில் 1950 களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சிவப்பு முக்கோணம் (நிரோத் உபயோகம் ) அறிமுகப்படுத்திய நாடு இந்தியா. இதே பிறநாடுகளில் வெற்றி பெற்ற இந்த முயற்சி இங்கு தோல்வி அடைய மத சார்பின்மை என்ற வேஷத்தில் இங்கு அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் காரணம். இதே சீனாவில் ஒரு குழந்தை கோட்பாடு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.(தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது ) இங்கு அது சாத்தியமில்லை. 1970 களில் மாவோ அந்நிய முதலீடுகளுக்கு கதவை திறந்தார் சீனர்கள் வளம் பெற்றனர். நாம் சோஷலிச ஜனநாயகம் பேசி வீணாய் போனோம் (இதற்கு நமது காம்ரடுகளும் காரணம் ) எந்த ஒரு முயற்சியானாலும் எங்கள் மார்க்கம் அனுமதிக்காது என்று கூட்டம், அந்நிய முதல்லிடுகளுக்கு இத்தாலி அனுமதி பெற வேண்டும் என்ற நிலை (கூடங்குளம் பிரச்சினை அனைவர்க்கும் தெரியும் ) நமது think tank களும் தங்களது பிள்ளைகளுக்கு அமெரிக்க visa பெறுவதில் இருந்த நாட்டம் நமது நாட்டின் மீது இல்லை.எல்லாவற்றிற்கும் முட்டு கட்டை., நொட்டை சொல் பின் எப்படி நாடு வளரும், டெல்லியில் வெங்காயம் விலை ஏறியதால் ஒரு அரசே கவிழ்ந்தது. இதுதான் நமது அணுகுமுறை. சிறுவயதில் இருந்தே நாடு பற்றை ஊட்ட தவறிவிட்டோம். படித்தவர்களுக்கு அமெரிக்கா கனவு, அரசியல் வாதிகளுக்கு வாரிசை பதவிக்கு கொண்டுவருவதில் அக்கறை.இதில் நாம் சீனாவுடன் போட்டியா ? நினைத்து பார்க்கவே முடியாது.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X