சித்திரை பெருவிழாவின்போது ஓட்டுப்பதிவு தேர்தல் ஆணையம் மீது பா.ஜ., பாய்ச்சல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சித்திரை பெருவிழாவின்போது ஓட்டுப்பதிவு தேர்தல் ஆணையம் மீது பா.ஜ., பாய்ச்சல்

Added : மார் 14, 2019
Advertisement

சிதம்பரம்:சித்திரை பெருவிழாவையொட்டி, மதுரையில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனை பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.இது குறித்து பா.ஜ., மாநில பிரசார அணி செயலாளர் ராஜரத்தினம் விடுத்துள்ள அறிக்கை:லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்., 18ல் நடக்கிறது. அன்றைய தினம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது. எனவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்கள், அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட் கிளையும், பரிசீலிக்க கூறி உள்ளது.ஆனால் எந்த கருத்தையும் காது கொடுத்து கேட்க இந்திய தேர்தல் ஆணையம் தயாரில்லை. இது, தமிழக மக்களை அவமதிப்பதற்கு சமமாகும். ஆன்மிகமா அல்லது ஓட்டுச்சாவடியா என்று வாக்காளர்களை கட்டாயப்படுத்ததேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை. விழா தேதிகளை சரிபார்க்காது அறிவித்தது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தவறு. அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, மதுரையில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X