கடும் வெயில் காரணம் இளநீர் விலை 'கிடுகிடு' | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடும் வெயில் காரணம் இளநீர் விலை 'கிடுகிடு'

Added : மார் 14, 2019
Advertisement

மந்தாரக்குப்பம்:கொளுத்தும் வெயிலை சமாளிக்க இளநீர் பருக மக்கள் ஆர்வம் காட்டுவதால், அதன் விலை உயர்துள்ளது.கோடை காலத்தில் இளநீர், பழங்கள், கரும்புசாறு, உள்ளிட்டைவகளுக்கு நல்ல கிராக்கி ஏற்படும். தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வெயிலை சமாளிக்க இளநீர் பருக ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் படி தற்போது தோப்புகளில் வியாபாரிகள் நேரடியாக சென்று இளநீர் ஒன்று 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனுடன் போக்குவரத்து, ஆள் கூலி, லாபம் ஆகியவை சேர்த்து ஊருக்கு தகுந்தாற்போல் விற்கப்படுகிறது.மேலும் 'கஜா' புயல் பாதிப்பால் பெரும்பாலான தென்னை மரங்கள் சாய்ந்தன. இளநீர் வரத்தும் குறைத்து விட்டது. இதனால் இளநீர் விலை கடுமையாக உயர்வு அடைந்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X