அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயகாந்த்,ராமதாஸ்,இணைந்தனர்

சென்னை: தமிழக அரசியலில் இரு துருவங்களாக இருந்த விஜயகாந்தும், ராமதாசும் நேற்று இணைந்தனர். சென்னையில் நேற்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். பழைய பகையை மறந்து இரு தரப்பினரும் திடீர் சமரசம் செய்துள்ளனர்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு நேற்று பகல் 11:20க்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வரவேற்றார். மஞ்சள் நிற சால்வையை விஜயகாந்திற்கு அன்புமணி அணிவித்தார். ராமதாஸ், அன்புமணி இணைந்து விஜயகாந்திற்கு பூங்கொத்து கொடுத்தனர்.

விஜயகாந்த் அருகில் அமர்ந்த ராமதாஸ் உடல்நலம் குறித்து விசாரித்தார். அரசியல் களத்தில் ராமதாஸ் - விஜயகாந்த் சந்திப்பு முதல்முறையாக நடந்துள்ளது. பழைய பகையை மறந்து தேர்தல் பணியாற்றுவது குறித்து பகல், 12:00 மணி வரை இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். ராமதாஸ் உள்ளிட்டோருக்கு சூடான வெண்டைக்காய் பக்கோடா, 'புரூட் பிஸ்கட், லெமன் டீ' வழங்கப்பட்டது. பா.ம.க.,வின் வெற்றிக்கு துணைபுரிய வேண்டும் என்றும், அதற்கு பரிகாரமாக தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வதாகவும் ராமதாஸ், அன்புமணி இருவரும் விஜயகாந்திடம் உறுதியளித்தனர்.

ராமதாஸ் பேட்டி:


விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தோம். நல்லபடியாக அவரை சந்தித்தோம். தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுவது வழக்கமானதுதான். இது இப்போது மட்டும் நடக்கவில்லை. இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.

பேட்டியின் போது பொள்ளாச்சி சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் ராமதாசும், அன்புமணியும் நழுவினர். ராமதாசிடம் இப்பிரச்னை குறித்து நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ராமதாஸ் கருத்து சொல்ல முயன்றார். உடனே குறுக்கிட்ட அன்புமணி, ''நன்றி, நன்றி'' என கிளம்ப முயற்சித்தார். ஆனால் ராமதாஸ் அங்கேயே நின்றார்.

இதையடுத்து, ''வாங்கப்பா போகலாம்'' என அன்புமணி அழைக்க, சுதாரித்த ராமதாஸ் அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்தார். பின், மீண்டும் நிருபர்கள் அருகே வந்து, ''இப்பிரச்னை குறித்து, நாளை பேசுகிறேன்'' என கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

விஜயகாந்த் மகன் ரகசிய பூஜை:

தே.மு.தி.க., வேட்பாளர்கள் வெற்றிக்காக தென்காசி அருகேயுள்ள கிருஷ்ணபுரம் முண்டக கன்னியம்மன் கோவிலில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். கூட்டணி வெற்றி குறித்து அங்குள்ள சித்தரிடம் குறி கேட்ட அவர் தோல்வியை தவிர்க்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் மட்டுமே இருந்துள்ளனர். இந்த கோவிலில் சிறப்பு பூஜை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.


விஜயகாந்த் வீட்டில் ஆலோசனை:

தொகுதி உடன்பாட்டில் தே.மு.தி.க., கையெழுத்திடுவது குறித்து விஜயகாந்த் வீட்டில், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தே.மு.தி.க.,வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் தொகுதிகள்ஒதுக்கப்படலாம். வடசென்னைக்கு பதிலாக கிருஷ்ணகிரி தொகுதியை தே.மு.தி.க., எதிர்பார்க்கிறது. அதனால் அ.தி.மு.க., கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு தாமதமாகி வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் வீட்டிற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் நேற்று சென்றனர். அதேநேரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோரும் வந்தனர். இரு தரப்பினருக்கும் இணக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் அமைச்சர்கள் ஈடுபட்டனர். மத்திய சென்னை தொகுதியில் கோகுல இந்திரா போட்டியிட இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அ.தி.மு.க.,வின், ஒரே வேட்பாளரான கோகுல இந்திராவிற்கு தே.மு.தி.க., முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மத்திய சென்னை உள்ளது. தே.மு.தி.க., சம்மதிக்கும் பட்சத்தில் மத்திய சென்னையை அ.தி.மு.க.,விற்கு வழங்கி விட்டு, வடசென்னை தொகுதியில் போட்டியிட பா.ம.க., விரும்புகிறது. அதற்கு பதிலாக தே.மு.தி.க.,விற்கு, விழுப்புரம் தொகுதியை விட்டு தர பா.ம.க., முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகாந்த் வீட்டில் நடந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.Advertisement

வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மார்-201921:05:06 IST Report Abuse

Pugazh V"குடும்பமே இருந்த இடமே தெரியாமல் வேரோடு அழிய வேண்டும் "/ வன்முறை மற்றும் வன்மம் நிறைந்த இந்த ந.ரா.ரா.நா என்கிற வாசகரை விடவா இன்னொரு தீவிர வாதி இருந்து விட முடியும். இவரல்லவா பயங்கரமான, கொலைவெறி பிடித்த தீவிரவாதி. ஒரு குடும்பத்தையே அழிக்க நினைக்கிற கொலைவெறி பிடித்த கிரிமினல்.

Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15-மார்-201918:34:43 IST Report Abuse

Vasudevan Srinivasanதிரு.ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலம் விசாரிக்க வந்ததாக சொல்லிவிட்டார் மேலும் கூட்டணியில் இழுபறியல்லாம் இல்லை என்றும் சொல்லிவிட்டார் சரி... தேவையில்லாமல் அவரிடம் பொள்ளாச்சி சம்பவம் பற்றி கேள்விகேட்கவேண்டிய அவசியமென்ன..?

Rate this:
Vetri - Chennai,இந்தியா
15-மார்-201917:27:20 IST Report Abuse

Vetriஎன்னமோ மக்கள் பிரச்சனைக்காக சாதித்த மாதிரி முக்கியத்துவம் தேவையா?

Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X